04-10-2004, 11:51 PM
புலிகள் மோதல் எதிரொலி: மீண்டும் அகதிகள் ராமேஸ்வரம் வருகை
ராமேஸ்வரம்:
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், கருணாவின் படையினருக்கும் இடையே வெடித்துள்ள பயங்கர மோதலையடுத்து தமிழர்கள் ராமேஸ்வரம் பகுதிக்கு அகதிகளாக வரத் தொடங்கியுள்ளனர்.
இலங்கையில், சிறிது காலம் அமைதி நிலவி வந்தது. புலிகளுக்கும்,இலங்கை ராணுவத்திற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதால் சுமூக நிலை நிலவியது. இதையடுத்து தமிழகத்தில் தங்கியிருந்த அகதிகளில் பலர் மீண்டும் தாயகம் திரும்பிச் சென்றனர்.
இந் நிலையில் புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டு கருணா தலைமையிலான படை மீது புலிகள் தாக்குதல் நடத்தி வருவதால் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் அங்கிருந்து பெருமளவில் வெளியேறி வருகின்றனர்.
அவர்களில் சிலர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். கடந்த இரு நாட்களில் மட்டும் 10 பேர் ராமேஸ்வரம் வந்துள்ளனர். தலா ரூ. 6,000 படகுக் கட்டணமாக கொடுத்து அவர்கள் தப்பி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Thanx: ThatsTamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>