04-10-2004, 05:00 PM
கருணாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிக்கை
<img src='http://www.yarl.com/forum/files/ltte.jpg' border='0' alt='user posted image'>
Saturday, 10 April 2004
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவுக்கும், அவருடைய சகாக்களுக்கும் எதிரான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை முழுமையாக கீழே தருகிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தினால் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா, தொடர்ந்தும் தலைமைப்பீடத்திற்கு எதிரான செயற்பாடுகள், மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கு உந்துதலாக தமிழ்த் தேசியத்துக்கு விரோதமான சக்திகளும் பின்புலத்தில் செயற்படுகின்றன.
கருணாவினால் இயக்க நடைமுறைக்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட குழப்பத்தை எமது தலைமைப்பீடம் இரத்தக்களரி, உயிரிழப்புக்கள் இன்றி சுமுகமான நிலைக்குக் கொண்டுவருவதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளது.
ஆயினும் போராளிகள் தமது சொந்த விருப்பத்தின்பேரில் வெளியேறி, இயக்கத்துடனோ அன்றி பெற்றோருடனோ இணைந்து கொள்வதற்கு தடையாக இருப்பது மட்டுமல்ல, போராளிகளை அழிப்பதற்கான செயற்பாடுகளிலும் கருணா இறங்கியுள்ளார்.
இந்நிலையில் பொதுமக்களையும், போராளிகளையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தலைமைப்பீடம் தள்ளப்பட்டுள்ளது. எனவே கருணாவை தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச்சந்தர்ப்பத்;திலும், அநேக போராளிகள் எம்மிடம் திரும்பிவந்து கொண்டிருக்கிறார்கள். எனவே வீணான உயிரழப்புக்களைத் தவிர்ப்பற்கு, எஞ்சியுள்ள போராளிகளையும் இயக்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு கோருகிறோம்.
இதேவேளை, தமிழ்த் தேசியத்துக்கான போராட்டத்தில் தமது பிள்ளைகளை மனமுவந்து இணைத்துவைத்த பெற்றோர்கள் கருணாவின் துரோகச் செயல்களுக்கு தமது பிள்ளைகளை பலியாக்கிவிடாது அவர்களை மீட்டு எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினரால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

\" \"