04-10-2004, 04:36 PM
Eelavan Wrote:BBC Wrote:இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக மோதலுக்கு செல்ல இடமளிக்கப்படாது
- கிழக்கு மாகாண படையதிகாரி தெரிவிப்பு
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக மோதல்களுக்குச் செல்ல புலிகளுக்கோ அல்லது கருணா தரப்பினருக்கோ இடம் கொடுக்கப் போவதில்லையென கிழக்கு மாகாண படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தற்போது நடைபெற்றுவரும் மோதல்கள் பற்றி அந்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில், போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலுள்ளது. அதில், இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஆயுதங்களுடன் செல்ல புலிகளுக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஆயுதங்களுடன் செல்ல படைத் தரப்பிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை இராணுவம் இதுவரை மீறவில்லை. புலிகளும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.
எமக்கு புலிகளென்றோ கருணா குழுவென்றோ வேறுபாடு கிடையாது. பொதுவாக அவர்களை நாம் புலிகளாகவே பார்க்கிறோம்.
அதனால் புலிகள் ஆயுதங்களுடன் எமது பகுதிகளுக்கு வர ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
எவராவது இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக@டாக மற்றப் பகுதிக்குள் ஊடுருவிச் செல்ல முனைந்தால், அதற்கு அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதனையும் மீறி செயற்பட முனைந்தால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த விடயத்தில் இராணுவம் கடும் போக்கைக் கடைப்பிடிக்கும்.
எங்களைப் பொறுத்தவரை போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றோம். இதனால் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பையும் முழு உர்hர் நிலையில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
Thanx: Thinakkural
மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் ஆயுதங்களுடன் கருணா குழுவினர் நடமாடி வருகின்றனர்
படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து வர்த்தகர்களை மிரட்டியுள்ளனர்
இலங்கை இராணுவம் என்ன சொல்ல வருகிறது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றா?
இலங்கை அரசாங்கள் சொல்வது பிரபாகரன் தலைமையிலாம புலிகள் அரச கட்டுப்பாட்டு பகுதியை உபயோகிக்க முடியாது என்பது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் அரசாங்க படைகள் செயற்படுகின்றார்கள் என்று நினைக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

