04-10-2004, 07:10 AM
வாகரை வரை தடையின்றி முன்னேற்றம்
கருணாவின் பிரதேசத்துக்குள் புலிகள் ஊடுருவிப் பாய்ச்சல்
எதிர்த்தவர்கள் 8 பேர் காயம், அவர்களில் நால்வர் மரணம்
ஈடுகொடுக்க முடியாமல் பல நு}ற்றுக்கணக்கானோர் சரண்
விடுதலைப் புலிகள் படையணிகள் மட்டக்களப்புக்கு வடக்கே யுள்ள வெருகல் ஆற்றைக் கடந்து கருணாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நேற்று அதிகாலை ஊடுருவி அதிரடித் தாக்குதல் நடத்தின. தாக்குதலில் கருணா தரப்பினர் 7 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் நால்வர் இறந்துவிட்டனர் என அறிவிக்கப்படுகிறது. முன்னேறி வரும் புலிகள் படையணி கள் வாகரையை அடைந்தன என்று பிந்திக் கிடைத்த தகவல் கள் தெரிவித்தன. புலிகள் கருணாவின் பகுதிக்குள் புகுந்து கனரக பீரங்கிகள் சகிதம் அதிரடித் தாக்குதல் நடத்தியதில் கருணா தரப்பின் வாகரைப் பிரதேசத் தளபதி ஜெயமும் காயமடைந்தார். அவரைப் புலிகள் கைது செய்திருக்கின்றனர் என்று ஒரு தகவல் தெரிவித்தது. தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் கருணாவின் எல்லைப் பாதுகாப்புக்கு நிறுத் தப்பட்டவர்களும், புதிதாக அனுப்பப்பட்டவர்களுமாக பல நு}ற்றுக்கணக்கானோர் சரணடைந் தனர். தம்மிடம் இருந்த கனரக பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களை அவர்கள் கையளித்தனர். தாக்குதல் நடத்திய புலிகள் முதலில் கருணாவின் கதிரவெளி தளத்தைக் கைப்பற்றித் தம்வசமாக்கினர். அந்தத் தளத்துக்குப் பொறுப்பாக இருந்தவர் மார்க்கான் ஆவார். அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. மாங்கேணியிலிருந்து வெருகல் வரையான பகுதிக்குப் பொறுப்பாக இருப்பவர் ரெஜி என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி சிவனேசத்துரை. இவர் கருணாவின் மூத்த சகோதரர். வெருகலில் அதிகாலையில் தாக்குதல் ஆரம்பமானபோது ரெஜி முதலில் வாகரைக்கு ஓடித்தப்பிவிட்டார். அவரை முற்பகலில் அங்கே தாம் கண்டனர் என்று வாகரை வாசிகள் தெரிவித்தனர். விடுதலைப் புலிப் போராளிகள் நேற்று முற்பகல் வாகரைக்கு மிகச் சமீபமாக உள்ள பால் சேனையில் தமது நிலையைப் பலப்படுத்திக்கொண்டிருந்தனர். நேற்று மாலை அவர்கள் வாக ரையைத் தம்வசமாக்கினர் என்று ஒரு தகவல் தெரிவித்தது. சொர்ணம் தலைமையிலான புலிகள் அணியே பல நு}ற்றுக்கணக்கில் கருணாவின் பிர தேசத்துக்குள் ஊடுருவி முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு புறத்தில் கடல் வழியாகச் சந்திரவெளியிலும், மறுபுறத்தில் வெருகல் ஆற்றைக் கடந் தும் ஷகிடிக்கிப் பிடி| படை நகர்வு ஒன்றை நேற்று அதிகாலை வெற்றிகரமாக ஆரம்பித்த புலிகள், ஆரம்பத்தில் சிறிய எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும் பின்னர் தங்குதடையின்றி வாகரை வரை முன்னேறினர் என்று கூறப்பட்டது. கருணா குழுவின் மிக இளவயதினரைக் கொண்ட - ஒரு சிறிய அணி மட்டுமே வாகரைக்கு அப்பால் பனிச்சங்கேணிப் பிரதேசத்தில் நேற்று மாலை காணப்பட்டது என்றும் - அதைத்தவிர, வாகரைப் பகுதியில் தங்கியுள்ள புலிகளின் அணியை எதிர்க்கக்கூடிய தயார் நிலையில் அதற்குக் கிட்டவாகக் கருணா குழுவின் எந்த அணியையும் காணமுடியவில்லை என் றும் - அப்பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து மாங்கேணி றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் தஞ்சம் புகுந்த அகதிகள் தெரிவித்தனர். ஷகட்டுடல் கொண்ட - வளர்ந்த - புலிகளின் போராளிகள் அலை அலை யாக வெருகல் பக்கத்திலிருந்து அள்ளுப்பட்டு வந்துகொண்டிருந்தனர். கருணா பக்கத்தில் உள்ள சிறு பொடியன்கள் அவர்களுக்குத் தாக்குப் பிடிப்பார்களா என்று நான் நம்ப வில்லை|| - என்றார் அந்த அகதிக ளில் ஒருவர்.
கைப்பற்றிய பிரதேசங்களைப் பலப் படுத்துவது, சரணடைந்த போராளி களைப் கவனித்து, ருகோணமலை யில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகு திக்கு அனுப்பிவைப்பது போன்ற பணி களால் புலிகள் அணிகளின் முன் நகர்வு தாமதமாவதாகத் தெரிவிக்கப் பட்டது. கருணா குழுவின் தரப்பில் காய மடைந்த இருவரை அவசர சிகிச் சைக்கு ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் ஒன்று கிளைமோரில் சிக்கிச் சிதறி யது. அதில் இருந்த கருணா குழுவி னர் இருவரும் ரவீந்திரன் என்ற அம் புலன்ஸ் சாரதியும் அந்த இடத்தி லேயே உயிரிழந்தனர். இதேவேளை - நேற்று இப்பிர தேசத்தில் பயணிகள் பஸ் ஒன்றும் கண்ணிவெடியில் சிக்கியது. அதில் பயணம் செய்த 4 பொதுமக்கள் காயமடைந்தனர்.
Thanx: Uthayab

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>