04-09-2004, 06:57 PM
<b>பிரபாகரன்-கருணா படைகள் மோதல்: கிழக்கு இலங்கையில் வெடித்தது சகோதரப் போர்; உஷார் நிலையில் ராணுவம்</b>
கிழக்கு இலங்கை மட்டக்களப்பில் காட்டுப் பகுதியில் செய்தியாளரிடம் (வெள்ளிக்கிழமை) பேசுகிறார் புலிகள் போட்டிக் குழுத் தலைவர் கருணா என்ற வி. முரளீதரன்.
கொழும்பு, ஏப். 10: இலங்கை கிழக்குப் பகுதியில் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் கருணா தலைமையிலான கோஷ்டியினருக்கும் இடையில் வியாழக்கிழமை இரவு மோதல் வெடித்தது.
இரு தரப்புகளையும் சேர்ந்த 8 போராளிகளும் மீட்புப் பணியில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவரும் இறந்தனர் எனத் தகவல் கிடைத்துள்ளது.
இதனிடையில், கருணா ஆதரவு போராளிகள் 300 பேர் விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் சரணடைந்துவிட்டனர் என்று புலிகள் ஆதரவு இணையதளம் "தமிழ்நெட்' தெரிவிக்கிறது.
புலிகளின் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளதால், இலங்கை கிழக்குப் பகுதியில் ராணுவம், போலீஸ் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வடக்குப் பகுதியைச் சேர்ந்த விடுதலைப் புலிகள், கிழக்குப் பகுதியில் திரிகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைப் பிரிக்கும் வெருகல் நதியைக் கடந்துவந்து வியாழன் இரவில் தாக்குதல் நடத்தினர்.
அப்போது புலிகள் சிறிய பீரங்கிகள், துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தினர் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
கதிரைவெளி என்ற இடத்தில் காயமடைந்து விழுந்த போராளிகளை எடுத்து வரச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரும் கண்ணிவெடியில் சிக்கி இறந்தார்.
ஆம்புலன்ஸ் டிரைவரின் உடலை மீட்க உதவும்படி கருணா கோஷ்டியினர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைக் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், இரு தரப்பினரிடமிருந்தும் உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், இறந்தவர் உடலை எடுத்து வர இயலாது என்று செஞ்சிலுவைச் சங்கம் மறுத்துவிட்டது.
பொதுமக்கள் காயம்: திடீரென்று மோதல் வெடித்ததால், இடைப்பட்ட பகுதிகளில் சிக்கிய பொதுமக்களில் பலர் காயமடைந்தனர்.
பஸ்ஸில் சென்று கொண்டிருந்த மூன்று பயணிகள் காயமடைந்தனர். மூன்று கார்களும் தாக்குதலுக்கு உள்ளாயின.
காயமடைந்த 8 விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் நிலை மோசமாக இருக்கிறது.
இதைப் போல் காயமடைந்த 6 போராளிகள் வெள்ளச்சேனை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். அங்கு இரு பெண் போராளிகள் இறந்தனர்.
""வெருகல் ஆற்றின் தென் கரையில் மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த கருணா ஆதரவினர் 300 பேர் ஆரம்பத்தில் எதிர்த்தனர். ஆனால், தொடர் தாக்குதலை அடுத்து, அவர்கள் சரணடைந்துவிட்டனர்'' என்று "தமிழ்நெட்' தெரிவிக்கிறது.
மோதல் குறித்தும், சாவு குறித்தும் கருணா இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஆனால், "புலிகளின் மேலிடத் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டது' என்று கருணா ஆதரவாளரான வரதன் தெரிவித்தார்.
தங்களது 500 போராளிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதாக கருணா தரப்பினர் தெரிவித்தனர். வெருகல் ஆற்றின் இரு கரைகளிலும் இரு கோஷ்டிகளையும் சேர்ந்த ஆயிரம் போராளிகள் கடந்த சில வாரங்களாகவே குவிக்கப்பட்டிருந்தனர். எந்நேரமும் மோதல் வெடிக்கும் அபாயம் இருந்தபோதும் தேர்தல் காரணமாக மோதல் ஒத்தி வைக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் மண்ணில் ராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் இருபது ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போர் நார்வேயின் முயற்சியால் நிறுத்தப்பட்டு 2002 மார்ச் மாதம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
அதையடுத்து, தமிழர் பகுதிகளில் ஓரிரு துப்பாக்கிச் சூடுகளைத் தவிர பெரிய மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை.
புலிகளின் தலைமைக்கு எதிராக அந்த இயக்கத்தின் மட்டக்களப்பு -அம்பாறை கமாண்டர் கருணா என்ற முரளீதரன் கடந்த மார்ச் மாதம் போர்க்கொடி எழுப்பியிருந்தார். இயக்கத்தில் இலங்கையின் வடக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கிழக்குப் பகுதியினருக்குக் கிடைப்பதில்லை என்று அவர் புகார் கூறிவந்தார். அதையடுத்து, அவர் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.
www.dinmani.com