04-09-2004, 06:26 PM
வெருகல் ஆற்றை கடந்து ஒரு அணியும் பனிச்சங்கேணி கடற்பரப்பை ஊடறுத்து இன்னொரு அணியும், தரைமார்க்கமாக கட்டுமுறிவு ஊடாக மூன்றாவது அணியும் மும்முனைகளில் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதது. இதனையடுத்து கருணா தரப்பு படையணி காட்டுப்பக்கமாக பின்வாங்கியிருப்பதாகவும் தெரியவருகிறது. வெருகலில் இருந்து 14 கிலோமீற்றர் து}ரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது நிலைகளை பலப்படுத்தி கண்டலடி என்ற இடத்தில் காவலரண்களை அமைத்திருந்து அங்கிருந்து பத்துகிலோ மீற்றர் து}ரத்திலுள்ள மாங்கேணி வரை முன்னேறிவருகின்றனர். மட்டக்களப்பு நகரிலிருந்து 42 கிலோமீற்றர் து}ரத்திலிருக்கும் மாங்கேணியிலிருந்து 78 கிலோமீற்றர் து}ரம் வரையான 36 கிலோமீற்றர் பிரதேசத்தை கைபற்றுவதற்கே மோதல் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களில் ஐவர் பெண்கள், நால்வர் ஆண்கள் என்றும் ஆண் உறுப்பினர்களில் விநோதன் படையணி தளபதி பாரதிதாசனும் ஒருவர் எனவும் அவரது வயிற்றில் துப்பாக்கிச் சுூடு இடம் பெற்றுள்ளதால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியமனை வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்களை ஏற்றுவதற்காக சென்ற வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டி துப்பாக்கிப்பிரயோகத்திற்கு இலக்கானதாகவும் இச் சம்பவத்தின் போதே சாரதி உட்பட இரண்டு கருணா அணி பெண் உறுப்பினர்கள் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அம்புலன்ஸ் சாரதியின் சடலம் பால்சேனை என்ற இடத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வசம் இருப்பதாகவும் அதனை எடுத்துவர சர்வதேச செஞ்சிலுவைச்சங்க குழு முயற்சித்த போதிலும் இராணுவத்தரப்பு அனுமதி கிடைக்காததால் நண்பகல் வரை எடுத்துவரப்படவில்லை. வாகரைப் பிரதேசத்தை சேர்ந்த பொது மக்களை பாதுகாப்பாக வெளியேறுமாறு விடுத்த வேண்டுகோளையடுத்து அயற்கிராமங்களுக்கு இடம் பெயர்ந்திருப்பதாகவும் மட்டக்களப்புக்கும் வாகரைக்குமிடையிலான போக்குவரத்து மாங்கேணி இராணுவ சோதனை சாவடி வரையே அனுமதிக்கப்படுகிறது. இதேவேளை தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கருணா அணியைச் சேர்ந்த எண்மரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக தரவையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பு சேதவிபரங்கள் குறித்து எதுவும் அறியமுடியவில்லை.

