04-09-2004, 01:04 PM
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/vaharaiMapV_22264_200.jpg' border='0' alt='user posted image'>
![[Image: thead2.php?id=21]](http://www.ulakasanthai.com/thead2.php?id=21)
![[Image: tbody2.php?id=21]](http://www.ulakasanthai.com/tbody2.php?id=21)
===============
'எங்களை முன்னுக்கு மூவ் பண்ணுங்கடா எண்டு சொல்லிப்போட்டு றெயி அண்ணன் ஓடிற்றார்'
வாகரைப் பகுதியில் கருணாவை விட்டு விலகி ஓடிவரும் பல போராளிகள் சண்டை ஆரம்பமானபோது நடந்த விடயங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்திலிந்தபோது எறிகணைகள் விழுந்து வெடிக்கும் சத்தங்கள் கேட்டது. நாங்கள் தாக்குதல் தொடங்கி விட்டதை உணர்ந்து என்ன செய்வது என்று யோசித்தபோது எங்கள் முகாமுக்குப் பொறுப்பாக இருந்து நேசன் 'வந்துட்டானுகள் எழும்பி அடியுங்கடா' என்று சத்தமிட்டவாறு ஓடினார். நாங்களும் பின்னோக்கி ஓடி பாதுகாப்பான இடத்தில் கவர் எடுத்தோம்.
தொடர்ந்து தொலைத் தொடர்புக் கருவிகளில் 'அடியுங்கடா, அடியுங்கடா' என்று கொமாண்ட் வநது கொண்டே இருந்தது. நாங்கள் எவ்வித தாக்குதலிலும் ஈடுபடவில்லை. ஏற்கனவே யோசிச்சிருந்தபடி மீட்பு அணிகளிடம் வந்து சேர்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.
எவ்விடத்திலும் தீவிரமாக தாக்குதல் இடம் பெறவேயில்லை. நாங்கள் மீட்பு அணியின் தாக்குதல் தணியும் வரை பாதுகாப்பான இடத்தில் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் நேசனும் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார். 'எங்களை மூவ் பண்ணுங்கடா எண்டு சொல்லிப்போட்டு றெயி அண்ணன் ஓடிற்றார்' என்று கூறினார்.
பின்னர் விடிகாலை நேரத்தில் மீட்பு அணியைச் சேர்ந்த, எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான ராகவன் அண்ணன் வந்து எங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்று கூறினார்.
இதே நேரம் விடுதலைப் புலிகளின் வேகமான முன்னேற்றம் கருணா அணியின் முன்னணி தளபதிகளுக்கு மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. பனிச்ச கேணி, கட்டுமுறிவு போன்ற இடங்களைத் தவிர வாகரையின் பெரும்பகுதி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. ஓட்டுமடுப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் கருணா அணியைச் சேர்ந்த ஞானம் என்பவர் காயமடைந்துள்ளார்.
09.04.2004
மீட்பு அணிகளின் பாரிய தரையிறக்கம்
கருணாவின் முகாம்கள் பெட்டிவடிவில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. வெருகல், கதிரவெளி பகுதிகள் முழுக்கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன. வாகரைப் பிரதேசமும் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துகொண்டிருக்கிறது. வாகரைப்பகுதியின் காட்டுப்பகுதிகளை அண்டிய பனிச்சங்கேணி, கட்டுமுறிவு ஆகிய இடங்களில் சண்டைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் ரோந்து நடவடிக்கைகள் கடற்பகுதிகளில் பாரிய அளவில் இடம்பெறுகின்றன.
பல முனைகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான போராளிகள் கருணா குழுவிலிருந்து பிரிந்து ஆயுதங்களோடு மீட்பு அணிகளை நாடி வந்துகொண்டிருக்கின்றனர்.
கருணா குழுவிலிருந்து தக்க சமயத்தில் விலகிச் செல்ல தருணம் பார்த்திருந்த சில அணித் தலைவர்கள் தமக்குக் கீழுள்ள போராளிகளுடன் எதுவித எதிர்ப்பும் காட்டாமல் மீட்பு அணிகளை நோக்கி விரைகின்றனர்.
மீட்பு அணியினரால் மீட்கப்படும் போராளிகளின் பெயர் விபரங்களைத்திரட்டி, பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, மீட்கப்படுவோரின் நலன்களைக் காப்பதற்கென்று அமைக்கப்பட்டுள்ள விசேட ஒருங்கிணைப்புப் பிரிவு துரித ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.
மீட்கப்படுவோரில் வீடு செல்ல விரும்புவோர் பெற்றாரிடம் பாதுகாப்பாகக் கையளிக்கப்படவிருப்பதாகவும் அறியப்படுகிறது.
கருணா குழுவின் ஜிம் கெலி தாத்தாவின் அணியை நோக்கி தற்போது தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இறுதியாக எமக்குக் கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு கருணா குழுவால் கடத்தப்பட்டிருந்ததாகவும், அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அறியப்படுகிறது.
நன்றி உலகசந்தை மற்றும் தமிழலை நிழற்பதிப்பு...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>