04-09-2004, 07:24 AM
கருணா குழுவினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்!
வெள்ளி, 9 ஏப்ரல் 2004
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அதன் கிழக்குப் பகுதி தளபதி முரளிதரன் என்கின்ற கருணாவின் குழுவினர் மீது விடுதலைப் புலிகளின் அதிரடிப் படையினர் தாக்குதல் தொடர்ந்ததை அடுத்து, இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது!
இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக்களப்பு நகரத்தில் இருந்து 86 கி.மீ. தூரத்தில் உள்ள வெருகல் எனும் ஆற்றை விடுதலைப் புலிகளின் அதிரடிப் படையினர் கடந்து வக்கரை எனுமிடத்தை நெருங்கிவிட்டதாக வாலைச்சேனையில் இருந்து வெளியேறி வந்த மக்கள் கூறியதாக புலிகள் ஆதரவு இணையதளமான தமிழ்நெட் கூறியுள்ளது.
வெருகல் ஆற்றங்கரையில் முகாமிட்டிருந்த கருணா குழுவைச் சேர்ந்த 300 இளம் வீரர்கள் சண்டையிடாமலேயே சரணடைந்துவிட்டதாகவும் தமிழ்நெட் கூறியுள்ளது.
வக்கரையின் வடபகுதியில் முகாமிட்டிருந்த கருணாவின் படையினரும் தங்களுடைய ஆயுதங்களுடன் சரணடைந்துவிட்டதாகவும், கதிரவேலி என்ற இடத்தில் உள்ள கடலோர முகாம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.
இருதரப்பினருக்கும் இடையே நேற்று இரவு முதல் நடந்துவரும் இத்தாக்குதலில் இருதரப்பிலும் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.
வக்கரையின் மையப் பகுதியில் உள்ள கருணாவின் முகாமை நோக்கி விடுதலைப் புலிகள் பீரங்கி உள்ளிட்ட கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த போரின் காரணமாக கிழக்குப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவ தளபதி ஒருவர் தெரிவித்துள்ளதாக யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.
நன்றி - வெப் உலகம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>