04-09-2004, 07:22 AM
கருணா படையினர் மீது பயங்கர தாக்குதல்: மட்டக்களப்பை நோக்கி முன்னேறும் புலிகள்
விடுதலைப் புலிகளுக்கும் கருணா தலைமையிலான படைக்கும் இடையே நேற்று நள்ளிரவில் பெரும் மோதல் வெடித்தது. புலிகள் படைகள் மட்டக்களப்பில் உள்ள வகரை நோக்கி முன்னேறி வருகின்றன. இதையடுத்து கருணாவின் படையைச் சேர்ந்த சுமார் 300 பேர் புலிகளிடம் சரணடைந்துள்ளனர்.
நேற்று நள்ளிரவில் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான வெருகல் ஆற்றின் அருகே போர் வெடித்தது.
வெருகல் ஆற்றின் திருகோணமலை கரைப் பகுதியில் ஆயிரம் புலிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். அதே போல இன்னொரு கரை அமைந்துள்ள மட்டக்களப்புப் பகுதியில் கருணாவின் படையினர் சுமார் 1,000 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த இரு பிரிவினரும் மார்ட்டர்கள் மற்றும் துப்பாக்கிகளால் தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து புலிகளின் கமாண்டோ படைகள் கருணாவின் கட்டுப்பாட்டுள் உள்ள பகுதிகளை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளன. கதிராவெலி என்ற இடத்தைக் கைப்பற்றிய புலிகளின் படைகள் இப்போது பாட்சேனை என்ற இடத்தில் நிலை கொண்டுள்ளன. இந்தப் படைகள் வகரை நோக்கி முன்னேறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புலிகள் இயக்கத்தில் கருணா தலைமையில் பிளவு ஏற்பட்டதையடுத்து நடக்கும் முதல் மோதல் இதுவே. இதையடுத்து இலங்கை ராணுவம் உஷார் நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
இரு தரப்பிலும் இதுவரை 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. கருணாவின் வகரைப் பகுதியின் கமாண்டர் ஜெயம் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
இப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 300 இளைஞர்கள் புலிகளிடம் சரணடைந்துள்ளனர். இவர்கள் புலிகள் மீது தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கருணாவின் மார்ட்டர் தாக்குதல் பிரிவுப் படைகளில் சிலவும் புலிகளிடம் சரணடைந்துள்ளன.
இப் பகுதியில்ன் கமாண்டரும் கருணாவின் அண்ணனுமான சிவனேசதுரை என்ற ரெக்கி தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது.
தொடர்ந்து கடும் மோதல் நடந்து கொண்டுள்ளது.
நன்றி - தட்ஸ் தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>