04-09-2004, 07:09 AM
கருணாவைத் தனிமைப்படுத்தும் முயற்சி ஆரம்பம்
ஜ தீபன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 09 ஏப்பிரல் 2004, 9:17 ஈழம் ஸ
இன்று கிடைக்கப்பெறும் செய்திகளின் படி, வெருகல் ஆற்றைக் கடந்து சென்ற புலிகள் அங்கே எதிர்த்தாக்குதல் புரிய முயன்றவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஆயுதங்களற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை விடுவிக்கும் நோக்கிலான முதற்கட்ட நடவடிக்கையே தற்போது ஆரம்பமாகியிருக்கலாம் என மட்டக்களப்பைச் சார்ந்த பத்திரிகையாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டு கதைத்த போது தெரிவித்தார்.
குறிப்பாக அன்னைபூபதியின் நினைவு நாளை மட்டு-அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் புலிகள் கொண்டாடியுள்ளதானது அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசமாக தற்போது வைத்திருக்கக்கூடிய நிலையில் பல பிரதேசங்கள் இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது எனவும் இந்தச் சண்டையில் வாகரைப் பிரதேசமும் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருணாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் போராளிகளை ஆபத்தின்றி விடுப்பதற்காகவே சில தளபதிகள் அவருடன் இன்னமும் தொடர்ந்து இருப்பதாகவே மட்டக்களப்பில் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாகத் தெரிவித்த மேற்படி பத்திரிகையாளர், கருணா பிளவுபட்டத்திலிருந்து சுமார் ஒரு மாதத்திற்கு மேலான காலத்தை விடுதலைப்புலிகள் அமைதியாகக் கழித்ததானது பெரும்பான்மையான கிழக்கு மாகாண மக்கள் உண்மையை உணர்ந்து கொள்ள வழிவகுத்தது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை சில இடங்களில் புலிகள் ஊடுருவியுள்ளனர் என்பது உண்மையே என கருணாவின் நெருங்கிய சகாவாகச் செயற்படும் வரதன் என்பவர் ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் பல இடங்களில் கேட்டதாகவும், ஆனாலும் காயமடைந்தவர்கள் யாரும் இன்னமும் வைத்தியசாலைகளிற்கு வரவில்லையெனவும் அருகிலுள்ள வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>