04-09-2004, 07:08 AM
தமது அணியை தனித்தரப்பாக அங்கீகரிக்குமாறு புதிய அரசிடம் கருணா கோரிக்கை
ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 09 ஏப்பிரல் 2004, 7:48 ஈழம் ஸ
புதிய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள சமாதான நடவடிக்கைகளில் தமது அணியை தனித்தரப்பாக அங்கீகரிக்க வேண்டுமென கருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கியுள்ள பேட்;;டியிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்குத் தளபதி கருணா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் எடுக்கப்படும் சமாதானத் தீர்வு தொடர்பான முடிவுகளை, கிழக்கு மாகாண மக்களிடம் திணிக்க முடியாதெனவும் குறிப்பிட்டுள்ள கருணா,வரப்போகின்ற பேச்சுவார்த்;தைகளில் கிழக்கு மாகாண தமிழர்களிற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் தமது அணி; தனித்தரப்பாக பங்குபற்றவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிதாக ஆட்சிப்பீடம் ஏறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொடர்பாக கருத்துக் தெரிவித்துள்ள கருணா, மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு என்ற வகையில், மக்களின் அபிலாஷைகளை புதிய அரசாங்கம் நிறைவேற்றும் எனத் தான் நம்;புவதாகவும், இன்றைய நிலையில் போரைத் தாம் விரும்பவில்லையெனவும் தெரிவித்துள்ளதோடு, கிழக்கில் ஒரு ஐனநாயக செயல் திட்டத்;;தைக் கட்டியெழுப்பவே தாம் விரும்புவதாகவும், இதனைப் புரிந்து கொண்;;டு புதிய அரசாங்கம் தம்;மை ஒரு தனித்தரப்பாக அணுகவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை புதிய பிரதமர் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கருணா, மஹிந்த ராஐபக்ஷ நல்ல அரசியல் அனுபவம் கொண்டவர் என்பதோடு அவர் ஒரு நல்ல மனிதர் எனக் குறிப்பிட்டிருப்பதுடன், புதிய பிரதமராக மகிந்த ராஐபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>