04-08-2004, 11:01 PM
உரிமைகளை மறுத்தால் தமிழீழமே தீர்வு ஐ.நா.சபையும் அங்கீகரிக்க வேண்டும்ஜெனிவாவில் கரிகாலன்
சிங்கள அரசாங்கங்கள் தமிழரின் ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்க மறுத்தால் பிரிந்து சென்று தமிழீழத்தை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இதற்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று ஜெனிவாவில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் கரிகாலன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;
புலிகளை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் தமிழர் ஒருவர் ஜனாதிபதியின் கட்சியிலேயே இருக்கிறார்.பொதுத் தேர்தலில் பேரினவாதக் கட்சியான ஹெல உறுமய வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் மூன்றாவது தென்னிலங்கை சக்தியாக உள்ளது. இச் சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா ? என்பது சந்தேகமே . உலக நாடுகள் சிங்கள அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும்.இல்லையேல் பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.தந்தை செல்வாவின் கனவை நனவாக்கி தமிழீழத்தை அமைக்கவும் புலிகள் தயங்கமாட்டார்கள்.
தமிழ்த் துரோகிகளையும்,தமிழின விரோதிகளையும் வெற்றி கொண்டதன் மூலமே புலிகள் இயக்கம் பலம் வாய்ந்த இயக்கமாக உருவாகியுள்ளது. தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு குரல் கொடுத்த 20 இற்கு மேற்பட்ட அமைப்புகள் அழிந்தொழிந்த பிற்பாடும் விடுதலைப் புலிகள் இயக்கம் இன்றும் மாபெரும் இராணுவக் கட்டமைப்புடன் தேசியத் தலைவரின் பின்னால் அணி திரண்டு நிற்கிறது.
தமிழின துரோகி அல்பிரட் துரையப்பாவை சுட்டு போராட்ட வரலாற்றை ஆரம்பித்து வைத்த தலைவர் கிழக்கிலங்கை நெருக்கடியை வெற்றி கொள்வார் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழர்கள் அனைவரும் தேசியத்தலைவரின் கருத்தை தொடர்ந்தும் பலப்படுத்தவேண்டும்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>