04-08-2004, 10:53 PM
சங்கரிக்கு ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய பட்டியலில் இடமளிக்க வலியுறுத்து
விடுதலைப்புலிகளின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு தலை வணங்காது போராடி வரும் வீரத்தமிழரான ஆனந்தசங்கரிக்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசியப்பட்டியலில் இடமளிக்குமாறு அதிஉயர் பீட உறுப்பினர்கள் வலியுறுத்திவருவதால் இது தொடர்பாக கட்சிதீவிரமாக ஆராய்ந்து வருவதாக கட்சியின் அதி உயர் பீட உறுப்பினரான ஓமல்பே சோபித்த தேரர் கேசரிக்குத் தெரிவித்தார்.
புலிகளின் அச்சுறுத்தலை சந்தித்து கொண்டிருக்கும் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். சுயேச்சைகுழுவில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினாலும் ஆனந்தசங்கரிபாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெறுவது அவசியமாகும்.
இத்தேசியப்பட்டியல் உறுப்புரிமையை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவரது விருப்பத்தை பொறுத்ததாகும் என்று ஓமல்பே சோபித்த தேரர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் அதுரத்லிய ரதன தேரரிடம் இதுதொடர்பாக தொடர்பு கொண்டு கேட்ட போது தமிழர்களின் ஜனநாயகத்திற்கான ஏகோபித்த குரலாக ஆனந்த சங்கரியை நாம் கருதுகிறோம். எனவே அவருக்கு தேசியப்பட்டியல் உறுப்புரிமை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்றார்
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>