04-08-2004, 06:43 PM
[b]புதிய ஆட்சியாளர்களின் திருவாய் மலர்ந்தருளல்கள்...!
<span style='color:red'>சிறீலங்காவின் அனைத்துப் பகுதியிலும் சிங்கள மக்கள் வாழக்கூடிய சூழலை உருவாக்குவேன்.
புதிய பிரதம மந்திரியாகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஐபக்ஷ, அவரது முக்கிய ஆதரவுத் தொகுதியான அம்பாந்தோட்டையில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கத்தறகமவில் அமைந்துள்ள கிரிவிகாரையில் வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர், அங்கு குழுமியிருந்த மக்களுக்கு உரையாற்றுகையில், நாட்டின் அனைத்துப் பகுதியிலும் அனைத்து மக்களும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்:
சிங்கள மக்கள், சிறீலங்காவின் எந்தப் பகுதியில் வாழ விரும்பினாலும், அவர்கள் சென்று வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவது அவசியம். சிறீலங்காவின் வரலாறும் நாகாPகமும், அனைத்துப் பாடசாலைகளின் அத்தியாவசிய பாடத்திட்டங்களில் சேர்க்கப்படுவது அவசியம் என்றும் சிறீலங்காவின் கலாச்சார பாரம்பரியங்கள் பேணப்படுதற்கும் இளய சமூகத்திற்கு அதை தெளிவுபடுத்துவதற்கும் முக்கிய கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
+++++++++++++++
சமாதானப் பேச்சுக்களில், ஐனாதிபதியின் தலைமையில், பிரதமர் உட்பட ஐ.ம.சு.முன்னணியின் கூட்டுக்கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள்
விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக நாட்டுமக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அறிவித்துள்ள ஐனாதிபதி சந்திரிகா, இதுகுறித்து நிருபர்களிடம் தெரிவிக்கும்போதே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடரவுள்ள சமாதானப் பேச்சுக்கள் ஐனாதிபதி தலைமையில், பிரதம மந்திரி, முக்கிய கட்சிகளின் தலைவர்கள் (குறிப்பாக ஐ.ம.சு.மு. கூட்டணியின் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள்) மற்றும் பிரதான அமைச்சர்கள் சிலரையும் உள்ளடக்கியே இடம்பெறும் என்று சந்திரிகா நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். </span>
நேற்றுவரை பயங்கரவாதிகள் என்று உச்சரித்தவர்கள்..நாளை மேசையில் இருந்து தமிழர்களுக்கு உரிமை வழங்கல் பற்றிப் பேசப்போகிறார்களாம்....????! (our view)
நன்றி புதினம் டொட் கொம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>