04-08-2004, 05:40 PM
<span style='color:red'>தேசிய பட்டியல் மூலம் ஆனந்தசங்கரிக்கு ஆசனம் வழங்க ஜாதிக ஹெல உறுமய திட்டம்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றை வழங்குவது தொடர்பாக அந்தக் கட்சியின் அதிஉயர் சங்க பீடம் நேற்று கலந்துரையாடியிருக்கிறது.
எனினும் இது தொடர்பாக இன்னமும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அதிஉயர் சங்க பீடத்தின் ஊடகப் பேச்சாளர் அத்துரலிய ரத்தின தேரர் தெரிவிக்கின்றார்.
இம்முறை தேர்தலில் வடக்கில் ஆனந்தசங்கரி ஐனநாயாக ரீதியாக தோற்கடிக்கப்படவில்லை. இதனால் தமிழ்ச் சமூகத்தின் உண்மையான மக்களின் குரல் இம்முறை ஒலிக்கவில்லை எனத் தெரிவித்த அத்துரலிய ரத்தின தேரர், இதன் காரணமாக தாம் ஆனந்தசங்கரியைக் கருத்திற்கொள்வதாகத் தெரிவித்திருக்கின்றார்.
இந்த நிலை காரணமாக ஆனந்தசங்கரியின் கொள்கைகளும், அபிலாஷைகளும் எதுவாக இருப்பினும், அவருக்கு ஐனநாயக ரீதியாக குரல் எழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமையாகும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
அவருக்கு தேசிய பட்டியல் அங்கத்துவத்திற்காக அழைப்பு விடுக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஆலோசனை நடத்தி வருவதாக அத்துரலிய ரத்தின தேரர் <img src='http://sooriyan.com/images/stories/seithi01/pikku_1.jpg' border='0' alt='user posted image'>மேலும் தெரிவித்திருக்கின்றார்.
இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னே இந்தியாவின் இரகசிய திட்டமிடல் இருப்பதாகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரசை, சந்திரிகா கூட்டணியுடன் இணையும் படி அழுத்தம் கொடுக்கும் அதேவேளை, தாம் ஆதரவு வழங்கிய ஆனந்தசங்கரிக்கு ஆசனம் ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதிலும் இந்தியா தனது இரகசிய ஊடுருவலைப் பிரயோகித்து வருவதாக கொழும்பிலுள்ள அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.
அவசியமின்றி ஈ.பி.டி.பி. கட்சிக்கு அமைச்சு ஒன்றை தாரை வார்த்துக் கொடுக்க சந்திரிகா முயல்வதற்கும் இந்தியாவின் செயற்பாடுகளே காரணம் என்றும் அந்த ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. </span>
நன்றி புதினம்...சூரியன் டொட் கொம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>