04-08-2004, 11:35 AM
தமிழ்க் காங்கிரஸிலிருந்து சி.வி.கே.சிவஞானம் விலகல்
யாழ். மாநகரசபையின் முன்னாள் ஆணையாளரும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவருமான சி.வீ.கே.சிவஞானம் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரி மையில் இருந்தும் தன் பொறுப்புகளில் இருந்தும் இராஜினா மாச் செய்துள்ளார்.
கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டி யிட்ட அவர் விருப்பு வாக்குக் குறைவாகப் பெற்றமையால் (25,954) நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படவில்லை. அதேசமயம், இவரது கட்சியைச் சேர்ந்தவரான கஜேந்திர குமார் பொன்னம்பலம் 60,768 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். இந்த நிலையில், தனது கட்சி தனது வெற்றிக்காகப் பாடுபடவில்லை என்று கடும் சீற்றமடைந்திருந்த சிவஞானம் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தான் இராஜினாமாச் செய்வதாகப் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம் பலத்துக்கு நேற்றுக் கடிதம் அனுப்பிவைத்தார். அக்கடிதத்தில், தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்குக் கட்சியும் அதன் நிர்வாகிகளும் தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ளவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டியுள் ளார். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சி.வீ.கே.சிவ ஞானம் முதற்றடவையாகப் போட்டியிட்டவர். அப்போதும் சுமார் 15 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படவில்லை. இரண்டாவது தட வையாக இந்த முறையும் அவர் தோல்வியடைய நேரிட்டுள்ளது. தனது தோல்விக்குக் கட்சி நிர்வாகிகளின் பாராமுகமே காரணம் என்று அவர் உறுதியாக நம்புகின்றார்.
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>