04-08-2004, 11:32 AM
முஸ்லிம்கள் தமது தேசியம் பற்றி சிந்திக்கவேண்டிய வேளை இது
பி.பி.ஸி பேட்டியில் ஹக்கீம் தெரிவிப்பு
தமிழர்கள் தமிழ்த் தேசியம் குறித்து சிந்திக்கின்ற வேளையில், முஸ்லிம்க ளும் தமது தேசியம் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.
- இப்படித் தெரிவித்தார் ஸ்ரீ.மு.கா தலைவர் ரவூப்ஹக்கீம். புதிதாகப் பதவி ஏற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்~ ஹக்கீமை நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்புக் குறித்து பி.பி.ஸியின் தமி ழோசைக்கு அவர் அளித்த பேட்டியி லேயே இப்படிக் கூறினார். அப்பேட் டியில் ஹக்கீம் மேலும் கூறியதாவது:- புதிதாகப் பதவி ஏற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்~வின் அரசு ஒரு சிறுபான்மை அரசாகவே உள்ளது. ஆயினும், நிபந்தனையுடனான ஆதர வைப்பற்றி நாங்கள் இன்னும் தீவிரமா கப் பரிசிலிக்க இயலும் . எதிர்க்கட்சி யிலிருந்து கொண்டே அவர்களை ஆதரிப் பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமாதான முன்னெடுப்புக்களை இந்த அரசு எவ்வாறு முன்கொண்டு செல்லப்போகிறது என்பது குறித்த தெளிவான சமிஞ்ஞைகள் இது வரை இல்லை. அதேநேரம், அரசமைப்புத் திருத் தம் தொடர்பாக ஜனாதிபதி ஏற்கனவே எடுத்துள்ள முடிவுகள் குறித்தும் சரி யான விவரங்களை எம்மால் பெற முடியவில்லை.
வடக்கு - கிழக்கைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள் தமது தேசி யம், சுயநிர்ணயம் போன்றவற்றை வலி யுறுத்தி தமிழரசுக் கட்சிக்கு ஆணை வழங்கியுள்ளனர். இதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் முஸ்லிம் மக்கள் தமது சுயாட்சிக்கோரிக்கையை வலியுறுத்தி ஆணைவழங்கியுள்ளனர். இந்த விடயங்களைத் தொடர்பு படுத்தி சமாதானப் பேச்சுக்களை முன் னெடுப்பதில் புதிய பிரதமருக்கு உள்ள அக்கறை குறித்து நாங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். எமது கட்சியின் அரசியல் நிலைப்பாட்டைத் தீர்மானிக்க முன்னர் இலங்கைத் தமி ழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர்களோடும் பேசுவது அவசியமாக உள்ளது. அவர்களை வழிநடத்து கின்ற புலிகளோடும் பேசவேண்டும். கடந்த காலத்தில் ஸ்ரீ.மு.கவுக்கும் புலிக ளுக்கும் இடையில் உடன்பாடுகள் எட் டப்பட்டிருந்தன. அவற்றிலே துரதிர்~;டவசமாக சில கருத்து வேறுபாடுகளும் தோன்றியிருந்தன. ஆனபோதிலும், எமக்கு இடையிலே மீண்டும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்துச் சிந்தித்துப்பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் - முஸ்லிம்களிடையே திறந்த மனதுடனான கருத்துப்பரிமாறல்கள் இடம்பெறுவது அவசியமானதாகும். - இப்படி ஹக்கீம் கூறினார்.
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>