04-08-2004, 10:39 AM
<span style='color:red'>வாழைச்சேனை கறுவாக்கேணியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
வாழைச்சேனை கறுவாக்கேணி பிரதேசத்தில் அடையாளம் காணப்படாத இளைஞர் ஒருவரின் சடலத்தை வாழைச்சேனை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் தலையில் துப்பாக்சிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டதாக வாழைச்சேனைப் பிரிவுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சாம் nஐயத்திலக்க தெரிவித்தார்.
நேற்றிரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிசாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இறந்தவர் 28 வயது மதிக்கத்தக்கவர் என்று பொலிசார் கூறுகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு கிரான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் வைத்தியசாலையிலிருந்து அறிவித்தலின்றி வெளியேறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு 11.35 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக மட்டக்களப்பு வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் என். தேவராஐன் தெரிவித்துள்ளார். </span>
நன்றி புதினம் டொட் கொம்
------------------
ஓட்டோவில் சென்றவர் சுடப்பட்டார்
இன்று மட்டக்களப்பு கிரான் பகுதியில் வைத்து கருணா குழுவினரால் ஓட்டோ சாரதியொருவர் சுடப்பட்டு காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியால் சென்று கொண்டிருந்த ஓட்;டோவை மறித்த கருணா குழுவினர் அது நிறுத்தாது சென்றதைத் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தாகவும் தெரிய வருகிறது. இத் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஓட்டோ சாரதி முழங்காலில் படுகாயமடைந்துள்ளதாகவம் தெரிய வந்துள்ளது.
நன்றி தமிழ் அலை நிழற்பதிப்பு...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>