04-08-2004, 03:48 AM
பாதுகாப்புக்கு வந்த இராணுவத்தினால்
மட்டு - அம்பாறை தமிழ் எம்.பிக்கள் ஐவரும்
பலவந்தமாகக் கூட்டிச்செல்லப்பட்டனர்!
கருணாவின் உத்தரவை அடுத்து
எடுக்கப்பட்ட நடவடிக்கை?
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத் திலிருந்து தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவான ஐந்து எம்.பிக்களும் நேற்று கொழும்பிலிருந்து பலவந்தமாகக் கிழக்குக்குக் கூட்டிச் செல்லப்பட்டிருக் கின்றார்கள் எனத் தெரியவருகின்றது.
தமிழர் கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்டம் நேற்றும், முன்தினமும் கொழும் பில் நடைபெற்றதால் அதில் பங்குபற்று வதற்காக கொழும்பிற்கு இந்த ஐந்து எம்.பிக்களும் வந்திருந்தனர்.
இராணுவத்தினரே அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளித்து அவர்க ளைக் கொழும்பிற்குக் கூட்டிவந்தனர். எனினும், அவர்களின் பாதுகாவலர்கள் என்ற க்Pதியில் கருணாவின் ஆள்கள் சிலரும் கூட வந்ததாகக் கூறப்படுகின் றது.
நேற்றுமுன்தினம் கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்டம் நடைபெற்ற சமயம் கருணா வின் ஆள்களும் உள்ளே புகுந்து அமர்ந்துகொண்டனர் என்றும் -
எனினும், நேற்றைய கூட்டத்தில் எம்.பிக்களைத் தவிர வேறு எவரும் உள்ளே அனுமதிக்கப்படாததால் இவர் களால் முதலில் உள்ளே நுழைய முடிய வில்லை என்றும் - தெரிவிக்கப்பட்டது.
அதனால் வாசலில் மறித்தவர்க ளுடன் வாய்த்தர்க்கப்பட்ட பின்னர் அவர்கள் திரும்பிச்சென்றனர்.
எனினும், பின்னர் கூட்ட முடிவில் பத்திரிகையாளர்கள் உள்ளே அனும
திக்கப்பட்டபோது அந்தச்சாக்கில் அவர்களும் உள்ளே நுழைந்து கொண்டனர்.
இதனிடையே நேற்றும், நேற்று முன்தினமும் கொழும்பில் தங்கி நின்ற மட்டு. - அம்பாறை தமிழ் எம்.பிக்கள் அனைவரும் தொடர்ந்தும் கொழும்பில் தங்கியிருக்க விரும்பினர்.
ஆனால், சம்பந்தப்பட்ட கருணாவின் ஆள்கள் கிழக்குக்குத் தொடர்பு கொண்டு இது குறித்துத் தகவல் தெரிவித்தனர் என்று கூறப்படுகின்றது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட எம்.பிக் களுக்குப் பாதுகாப்புக் கொடுத்துக் கூட்டிவந்த இராணுவத்தினர் தாங்கள் உடனடியாக கிழக்கே திரும்ப வேண்டும் என்றும் -
எம்.பிக்களைப் பத்திரமாகக் கூட்டிச் செல்லவேண்டிய பொறுப்பு தங்களுடையது என்பதால் அந்த எம்பிக்கள் தங்களுடன் வரவேண்டும் என்றும் அடம்பிடித்தனர்; பலவந்தப்படுத்தினர்.
தமிழ்க் கூட்டமைப்பு சிரே~;ட எம்.பியான இரா. சம்பந்தன் உடனடியாக இராணுவத் தளபதியுடன் தொடர்பு கொண்டு நிலைமையைச் சமாளிக்க முயன்றார். எனினும், அவரது முயற்சி பலிக்கவில்லை.
இராணுவத்தினர் அந்த ஐந்து எம்.பிக்களையும் வற்புறுத்தித் தம்முடன் அழைத்துச் சென்றனர். அவர் கள் ஐவரும் பதற்றத்துடன்- கிழக்கே சென்றதும் தாங்கள் எதிர்கொள்ளக் கூடிய நெருக்குதல் குறித்து அச்சத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.
புறப்பட்ட சமயம் அவர்களில் ஒருவரின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்ததாகவும் அதனை அவதானித்த ஒருவர் தெரிவித்தார். தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களுடன் ஒன்றிணைந்து செயற் பட இணங்கியதற்காக இவர்கள் ஐவரும் கருணாவின் ஆள்களின் கடும் நெருக்குதலுக்கு ஆளாவார்கள் எனக் கருதப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் 20 எம்.பிக்களும் நாளை வெள்ளிக் கிழமை கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளைச் சந்தித்துப்பேசவுள்ளமை தொடர்பாக முன்னர் வெளிவந்த செய்தி 9ஆம் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது.
www.uthayan.com

\" \"