Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்தியா+சிறிலங்கா= அரசியல்+சுயநலம், ஈழம்= போராட்டம்+இதுஎமதுய
#3
புதிய பிரதமர் தெரிவின் பின்னணியில் இந்தியா?

தமிழ்நெற் வியாழக்கிழமை, 08 ஏப்பிரல் 2004, 7:29 ஈழம்
சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஐபக்ஷ தெரிவு செய்யப்பட்டதின் பின்னணியில் இந்தியாவே இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருந்;த போதும், இந்தியாவின் அழுத்தம்காரணமாகவே பிரதமர் பதவிக்கான வாய்ப்பு மகிந்த ராஐபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக இவ்வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஐபக்ஷவின் பதவியேற்றதின் பின்னணியில் இந்தியா இருப்பதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை இந்தியத் து}துவர் நிரூபம் சென் முற்றாகமறுத்துள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்தியத் து}துவர், இலங்கையின் உள்நாட்;;;டு விவகாரங்களில் இந்தியா தலையிடவேண்டிய அவசியம் இல்லையெனத்தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுடனும் தொடர்ந்தும் முன்னெடுத்;;துச் செல்லப்படுமெனவும் நிரூபம் சென் நம்பிக்;கை தெரிவித்துள்ளார்.
நன்றி: புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 04-08-2004, 01:13 AM
[No subject] - by anpagam - 04-08-2004, 01:27 AM
[No subject] - by sOliyAn - 04-08-2004, 01:34 AM
[No subject] - by இராவணன் - 04-08-2004, 01:45 AM
[No subject] - by sOliyAn - 04-08-2004, 02:18 AM
[No subject] - by anpagam - 04-08-2004, 12:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)