04-08-2004, 01:23 AM
புதிய அமைச்சரவையில் 35 பேர் நாளை சுபநேரத்தில் பதவியேற்பு
ஈ.பி.டி.பி. க்கும் ஓர் இடம்; பாதுகாப்பு, நிதி ஐனாதிபதி வசம்
ஜ வீரகேசரி ஸ ஜ வியாழக்கிழமை, 08 ஏப்பிரல் 2004, 7:31 ஈழம் ஸ
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய அமைச்சரவை நாளை வெள்ளிக்கிழமை காலை சுபநேரத்தில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவை 35 உறுப்பினர்களை கொண்டிருக்கும் என்றும் இதில் நான்கு அமைச்சர் பதவிகள் Nஐ.வி.பி. க்கு ஒதுக்கப்படும் என்றும் விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஈ.பி.டி.பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் முக்கிய அமைச்சர் பதவியொன்று வழங்கப்படும் என்றும் தெரியவருகிறது.
புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கலாம் என்று நேற்று முன்தினம் சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் இடம்பெற்ற உரையாடல் ஒன்றின்போது முன்னணியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேம்ஐயந்த கூறியிருந்தார். ஆனாலும் அமைச்சுப் பொறுப்புகளை ஒதுக்குவதில் இழுபறி நிலை தோன்றியதால் திட்டமிட்டபடி மந்திரி சபையின் பட்டியல் நேற்று மாலை வரை ப10ர்த்தியாக்கப்படவில்லை. இதனை ப10ர்த்தி செய்யும் பணியில் ஐனாதிபதியும் பிரதமரும் மற்றும் கட்சித்தலைவர்களும் நேற்று ஐனாதிபதி செயலகத்தில் நீண்டநேரம் ஈடுபட்டிருந்தனர். புதிய அமைச்சரவை எப்போது பதவியேற்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம் ஐயந்திடம் வினவிய போது நாளை வெள்ளிக்கிழமையே பதவியேற்க விருப்பதாகக் பதிலளித்தார்.
Nஐ.வி.பி. பிரசார செயலாளர் விமல் வீரவன்சவும் இதனை ஊர்ஐpதம் செய்தார். வெள்ளிக்கிழமை காலை 8.51 க்கும் 9 மணிக்குமிடையேயுள்ள சுபவேளையில் புதிய மந்திரிசபை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே பாதுகாப்பு அமைச்சு, நிதியமைச்சு ஆகியவற்றின் பொறுப்புக்களை ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தாமே வைத்திருப்பாரென்றும் அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய அமைச்சான நிதி அமைச்சையும் ஐனாதிபதியே வைத்துக்கொள்ளலாமென அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. எனினும் பிரதிஅமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் ஆகியோரை தெரிவு செய்யும் பணிகளும் நேற்று நடந்தன.
இதேவேளை, புதிய அரசு தனது ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்து சிறிய கட்சிகளின் உதவியை நாடிவருவதாகத் தெரியவருகிறது.
225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிடம் 105 ஆசனங்களே உள்ளன. அரசாங்கம் ஸ்திரநிலையை அடைய வேண்டுமெனில் மேலும் 8 ஆசனங்கள் தேவை.
இ.தொ.கா. விடம் போனஸ் ஆசனங்கள் இரண்டையும் சேர்த்து 8 ஆசனங்கள் உள்ளன. எனினும் இ.தொ.கா. இதுவரை தனது உறுதியான நிலைப்பாடு என்ன என்று கூறவில்லை. அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அனைத்து வாய்ப்புக்களும் திறந்த நிலையிலுள்ளன என்று மாத்திரம் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எடுத்துக் கொண்டால் அதன் வசம் ஐந்து ஆசனங்கள் உள்ளன. எனினும் அங்கிருந்தும் சரியான 'சமிக்ஞை"கள் புதிய அரசுக்கு வந்ததாகத் தெரியவில்லை. பௌத்த பிக்குகள் அமைப்புக்கு ஒன்பது ஆசனங்கள் உள்ளன. அதன் தலைவர் அரசாங்கத்துடன் இணைந்து சில விடயங்களுக்காக வாக்களிப்போம் என்றும் கூட்டுச் சேர்வது பற்றி நாம் சிந்திக்கவில்லை என கூறியுள்ளார்.
இவ்வாறானதோர் இக்கட்டான சூழ்நிலையில் புதிய அரசு தனது ஸ்திரத்தன்மையைப் பாராளுமன்றத்தில் நிரூபிப்பதற்கும், அதற்கு முன்னர் அமைச்சரவையை தெரிவு செய்வதற்கும் மிகுந்த நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>