04-07-2004, 08:54 PM
vallai Wrote:Kanthar Wrote:உண்நாண உதை ஒருக்கால் கேழுங்கோ கிறுக்கர்
ஞாயமான கேள்விதான்
கந்தர் உந்தப்படம் எங்கை சுட்டனீங்கள் நல்ல வடிவாயிருக்கு
உங்களைப் பாக்கேக்கை ஒருக்கால் கேட்கவேண்டும் எண்டு நினைச்சனான்
உங்கை கரவெட்டிக்கை குடில் புடுங்கிக் கந்தசாமி எண்டொருத்தரைச் சொல்லுறவை
மனிசன் அசதியிலை கண்ணை மூடிச்சுதாம் எல்லாம் கூடி ஒப்பாரி வைச்சு சுடலைக்குக் கொண்டுபோய் எரிக்கிறதுக்கு விறகை அடுக்கிட்டு கொள்ளிக்குடம் சுத்திர நேரம் மனுசன் திடுக்கிட்டு நித்திரையாளை எழும்பின மாதிரி எழும்பிச்சுதாம் அதுதான் அந்தாளுக்கு அந்தப்பெயர்
நீங்கள் தான் அந்தாளோ எண்டு எனக்கு ஒரே ஐமிச்சம்
வல்லை நீங்கள் நினைக்குமாபோல குடில் புடுங்கி கந்தசாமி இல்லை நான்.
உங்களுக்கு தெரிஞ்சிராது, யமன் வேலாயுதத்தின்ர பேரன் நான். என்ரை அப்பு பேர்போன மாட்டுவண்டில் சவாரிக்காரர் மாணிக்கத்தார். அவற்றை கடசி வடி நான் - கந்தவனம்
நாங்கள் பத்து சகோதரங்கள். ஒரு பொம்பிள பிள்ளை இல்லை எண்டு என்ரை அப்பு போகாத கோயில் இல்லை. என்ரை ஆச்சி தான் சாவும் வரை உதை சொல்லி ஆழாத நாள் இல்லை.
வல்லை............ ம்.......... உதுகளை விடுவம் இப்ப.......
விசயத்துக்கு வாரன்.. அதுக்கு முதல் நீங்கள் ஆசைபட்டு கேட்டதுக்கும் நான் சொல்லுறன்.
கூகிள் போட்டன் ஓல்ட் இந்டியன் மான் எண்டு.. இமேஜை கிளிக் பண்ண ...........சொல்லி மாளாது..
ஒரு தொகை...அதில ஒண்டுதான் உந்த படம்.........
நீங்கள் சீவிக்குமாபோல இல்லை நான் இருக்கிற நாடு. உங்களுக்கென்ன வேலை செய்தா என்ன இல்லாட்டில் என்ன அரசாங்கம் படி அளக்குமாம்.. என்ரை பாடு அப்பிடி இல்லை..அதாலை சிலநேரம் என்னாலை களத்துக்கு முழு நேரம் வரேலாது.
அதுக்காக மனிசன் கண்ண மூடிட்டார் எண்டு புரளியை கிளப்பி விட்டுடாதேங்கோ.......
வருவன்....நான் வருவன்
நான் யமன் வேலாயுதத்தின்ரை பேரன்...........
வல்லையையும் தெரியும் வல்லை முனியையும் தெரியும்
வல்லை வெளில பறக்கிற குருவியளையும் தெரியும்

