04-07-2004, 02:44 PM
கிழக்குத் தமிழ் எம்.பிக்கள் எவருமே சு.கூட்டமைப்பை ஆதரிக்கமாட்டார்கள்
மட்டக்களப்பு, திகாமடுல்ல தேர் தல் மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் எவரும் ஜனாதி பதி சந்திரிகா குமாரதுங்கவின் ஐக் கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பின் அரசில் அங்கம் வகிக்கமாட் டார்கள். அப்படி சந்திரிகாவின் அர சுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று வெளியான செய்திகள் தவறானவை. - இ;ப்படி தகவல் வெளியிட்டி ருக்கிறார் மட்டக்களப்பைச் சேர்ந்த அரசியல், இராணுவ விமர்சகரான சிவராம் (தராகி). இதுதொடர்பாக அவர் பி.பி.ஸி. தமிழோசைக்கு| தெரிவித்ததாவது:- மட்டக்களப்பில் நிலைவரங்களை அவதானித்து வருகிறேன். கருணா அணியில் இருக்கின்ற அரசியல் பொறுப்பாளர் விசுவுடன் நான் இதுபற்றிப் பேசியிருந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கோட் பாட்டின் அடிப்படையில்தான் - இந் தப் பிரச்சினை ஏற்படும் வரை - தமது பிரசாரத்தை மேற்கொண்டு வந்தார்கள். அதற்கு முற்றும் முரணான கோட்பாடுகளைக் கொண்ட - ஜே.வி.பி. போன்ற கட்சிகளை உள்ளடக்கிய - சந்திரிகா அரசில் அங்கம் வகிப்ப தற்கு யாரும் அங்கு தயாராகவில்லை என்று அறியமுடிந்தது. அந்தவகையில், அரச ஊடகங் கள் கருணாவிற்கு ஆதரவான ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந் திரிகா அரசுக்கு ஆதரவு தெரிவிக் கப் போகிறார்கள் என்று கூறுவது தவறான தகவல் என்று உறுதியா கக் கூறலாம் - என்றார் சிவராம். இதற்கிடையில் - மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கருணா குழுவினர் நேற்றுமுன்தினம் அழைத்துப் பேசியுள்ளனர் என்று தெரி விக்கப்படுகிறது. ஐந்து எம்.பிக்களில் மட்டக்களப் பைச் சேர்ந்த ஜெயானந்தமூர்த்தி யைத்தவிர ஏனைய நால்வரும் இந் தச் சந்திப்பில் கலந்துகொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. ஜெயானந்தமூர்த்தி இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளாமல் கொழும்புக்கு வந்துவிட்டார் என்று ஒரு தகவல் தெரிவித்தது.
Thanx: Uthayan

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>