04-07-2004, 09:52 AM
நாளையத் தமிழ் எப்படி இருக்கும்?
சமீபத்தில் பத்திரிகை நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் எழுதிய கட்டுரை ஒன்றை அவர் செப்பம் செய்து கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். அந்தக் கட்டுரையில் இரண்டு மூன்று ஆங்கிலச் சொற்கள் இருந்தன. அவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்பது நண்பரின் அவா. எனக்கும் அதில் உடன்பாடுதான். முழுக்க நல்ல தமிழில் எழுதுவது என்பது எவ்வளவு அற்புதமான அநுபவம் என்பதை பல சமயங்களில் புரிந்து கொண்டிருக்கிறேன்.
"ஆனால், நெட்ல எழுதறவங்களுக்கெல்லாம் தமிழே தெரியல சார்.."
நான் ஒரு நிமிடம் அதிர்ந்துபோனேன். அவருக்கு நான்தான் இணையக் குழுக்களையும் வலைப்பதிவுகளையும் வலைஇதழ்களையும் அறிமுகப்படுத்தி வைத்தவன்.
"எப்படி சொல்றீங்க?"
"ஒருத்தனாவது திருத்தமா எழுதறானா பாருங்க.."
அவர் பெயர்களை அடுக்கிக்கொண்டே போனார். நான் பேச்சற்றுப் போனேன்.
மற்றொரு கூட்டம். தி இந்து ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர் பேசிக்கொண்டிருந்தார். பல ஆண்டுகள் நாளிதழ் இதழியலில் கொட்டை போட்ட சர்வீஸ்காரர். ஓரியன்ட் லாங்மனில் பணியாற்றியபோது, அவர் எழுதிய ஒரு புத்தக வெளியீட்டில் நான் பங்குபெற்றதால், தொடர்புண்டு.
"இந்த டாட்காம் எல்லாம் வந்தபோது, திடீர்னு கன்டெண்ட் மானேஜர்னு ஒரு போஸ்ட் உருவாக்கி, கண்டவனையெல்லாம் உட்கார வெச்சுட்டாங்க. அவங்களுக்கு ஜர்னலிசமும் தெரியாது, நல்ல எடிட்டிங்கும் தெரியாது. கமிட்மெண்ட்டும் கிடையாது. அப்பறம் எப்படி டாட்காம் உருப்படும்? தப்பித்தவறி அதுக்குள்ள போன பல நல்ல ஜர்னலிஸ்டுகளால தாக்குப்பிடிக்க முடியல. ஓடிவந்துட்டாங்க."
அது இதழியல் படிக்கும் மாணவர்களின் அரங்கு. கூட்டத்தில் இருந்த மூன்று நான்கு நண்பர்கள் சண்டைக்குப் போய்விட்டார்கள். அவர் கடைசி வரை தன் கருத்தை மாற்றிக்கொள்ளத் தயாரில்லை.
இந்த இரண்டு சம்பவமும் எனக்கு நாளையத் தமிழ் பற்றிய சிந்தனையைக் கிளறிவிட்டது.
இணையம் என்பது மிகச் சமீபத்திய நிகழ்வு. அதுவும் இணையத்தில் தமிழ் பழக்கம் என்பது 5 ஆண்டுகால அநுபவமே. ஆனால், இதில் நடந்திருக்கும் முக்கிய மாற்றங்கள் பல.
பொதுவாக, இணையம் என்பது படிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தவில்லை. ஆனால், எழுதும் ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. அதுநாள் உடல் பொருந்தி கடிதமே எழுதியிராதவர்கள் கூட, மின்னஞ்சல் வந்தவுடன், எக்கச்சக்க மின்னஞ்சல் அனுப்பத் தொடங்கிவிட்டார்கள். பத்திரிகை வாசிப்போ, புத்தக வாசிப்போ அதிகம் இல்லையென்றாலும், இணையக் குழுக்களில் பங்குபெற்று, தமக்குத் தெரிந்ததைச் சொல்லும் ஆர்வம் மிகுந்திருக்கிறது.
வலையிதழ்களில் எழுதும் பலர் புதுமுகங்கள். வாரஇதழ் மாதஇதழ் பக்கம் போகாமலே, இணையத்தின் வாயிலாகத் தோன்றி இங்கேயே புகழ்பெற்றிருக்கிறார்கள். இணைய எழுத்தாளர்கள் என்றே ஒரு வகையினர் உருவாகும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழில் வலைப்பதிவுகள் வந்தவுடன், மற்றொரு பாய்ச்சல்.
ஒருவகையில் இது 'ரிவர்ஸ் சைக்கிள்'. தொழில்நுட்பம் இங்கே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டிக்கொண்டிருக்கிறது. ஆசிரியர் தொகுத்துத் தருவதைப் படிக்க வேண்டிய காலம் போய், தமது எழுத்து ஆர்வத்தை நேரடியாக பகிர்ந்துகொள்ளும் வசதி தோன்றிவிட்டது. இதைத்தான் பர்சனல் வெப் என்று சொல்கிறோம். இணையச் சமூகம் என்பது இங்கேதான் பல்கிப் பெருகுகிறது.
ஆக, இங்கே நமது பழைய சட்டங்கள் செல்லுபடியாகாது. எழுத வருகிறவன்/ள், இந்த இந்த புத்தகங்களைப் படித்திருக்க வேண்டும், இந்த இந்த ஆசிரியர்களை நன்கு உணர்ந்திருக்கவேண்டும், எழுத்து முறைகளை தெரிந்துகொண்டிருக்கவேண்டும், இலக்கணப் பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்பதெல்லாம், இங்கே பொருந்தாது.
இங்கே எழுதும் செய்தி முக்கியம். எழுதும் ஆர்வம் அதைவிட முக்கியம்.
வலைஇதழ் ஆசிரியர்களுக்கும் இங்கே வேலை வேறு வடிவத்தினாலானது. வழக்கமான செப்பம் செய்யும் வாத்தியார் உத்தியோகம் இனி இங்கே இல்லை. ஆர்வமுள்ளவர்களுக்கு இடமளிப்பதும், அவர் தம்மை மேம்படுத்திக்கொள்வதற்குமான வசதியைச் செய்துதருவதுமே இவர் பணி.
அப்படியென்றால், எதிர்காலத் தமிழ் தப்பும் தவறுமாக இருக்குமா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமலில்லை. நிச்சயம் அப்படி இருக்கப்போவதில்லை. எழுதத் தொடங்கும் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு அளவில் ஒரு ஒழுங்கில் எழுதத் தொடங்கி, மேன்மேலும் பயிலத் தொடங்குகின்றனர். இந்தப் பயிற்சி அவர்கள் மொழியை வளப்படுத்தும். மேம்படுத்தும்.
இணையத்தைப் பொறுத்தவரை, நாளைய தமிழ், புலம்பெயர்ந்தோர், முதல் தலைமுறை தமிழ் வாசிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களின் கைகளில்தான் புழங்கப்போகிறது. அவர்களின் மொழியறிவைவிட, தொழில்நுட்ப அறிவுதான் அங்கே கோலோச்சப் போகின்றது. மொழி, தொழில்நுட்பத்தைப் பின்தொடரும்.
என்னைப் பொறுத்தவரை, தொழில்நுட்பம் முக்கியம் என்பதால், அது முன்னே போவதில் தவறில்லை. அதுவரை, வழக்கமான பத்திரிகையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கொண்டாட்டம்தான். மேடைதோறும் திட்டித் தீர்க்கபோகிறார்கள்! நாமும் செவிகுளிரக் கேட்டுக்கொண்டிருப்போம்!
நன்றி - ஆர்.வெங்கடேஷ்
உங்கள் சிந்தனைக்கும் கருத்துக்களுக்குமாக இந்த கட்டுரை.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>