04-07-2004, 09:28 AM
கதிர்காமருக்கு இது நல்ல படிப்பினை!
"இலங்கையின் தேசிய அரசியலில் தமிழர் ஒருவருக்குரிய இடம் என்னவென்பதை உணர்ந்திருந்த எவரும்இ கதிர்காமர் பிரதமர் பதவியை எதிர் பார்த்தால் அது வெறும் நப்பாசைதான் என்பதை அறியாமல் இருக்கவில்லை...."
இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ பதவியேற்றிருக்கின்றார். அவருக்கும் லசஷ்மன் கதிர்காமருக்கும் இடையில் அப்பதவிக்கு நடந்த இழுபறியில் கடைசியில் வென்றார் ராஜபக்க்ஷ.
பிரதமர் பதவிக்கு ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவின் தேர்வு கதிர்காமர்தான். ஜனாதிபதியின் விருப்பப்படி அப்பதவிக்கு கதிர்காமர்தான் நியமிக்கப்படுவார் எனப் பலரும் நம்பினர்; எதிர்பார்த்தனர். இலங்கையின் முதல் தமிழ்ப் பிரதமர் என்ற பெரு மையை கதிர்காமர் பெறுகின்றார் என்று பரபரப்பாகச் செய்திகள் கூட வெளியாகின. ஆனால்இ கடைசி நேரத்தில் எல்லாம் அவுட் ஆனால்இ இலங்கையின் தேசிய அரசியலில் தமிழர் ஒருவருக்குரிய இடம் என்னவென்பதை உணர்ந்திருந்த எவரும்இ கதிர்காமர் பிரதமர் பதவியை எதிர் பார்த்தால் அது வெறும் நப்பாசைதான் என்பதை அறியாமல் இருக்கவில்லை.
தான் தமிழன் என்பதை மறந்துஇ தனது இனத்துக்குத் தான் ஆற்றவேண்டிய கடமையைத் துறந்துஇ சிங்களப் பேரினவாதத்துக்கு ஆலவட்டம் பிடித்துஇ தமிழரின் உரிமைப் போராட்டத்தைச் சர்வதேச ரீதியில் கொச்சைப்படுத்தும் பேரினவாதப் பணிக்குத் துணை போன கதிர்காமருக்குஇ இப்போதைய நிகழ்வுகள் நல்ல பாடமாக அமைந்திருக்கும் என நம்பலாம். பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பதவிக்கு இலங்கைத் தரப்பால் நிறுத்தப்பட்டுஇ சர்வதேச ரீதியில் அவமானப்படுத்தப்படும் வகையில் - இழுக்குப் பெறும் விதத்தில் - அவர் தோற்கடிக்கப் பட்டபோது சிங்களத் தலைமையின் மத்தியில் தமது நிலை என்னவென்பதை அவர் உணர்ந்திருப்பார் என எதிர்பார்க் கப்பட்டது.
அது இப்போது அவருக்கு உறுதிப்படுத்தி உணர்த் தப்பட்டிருக்கும் என நம்பலாம். கதிர்காமர் பிரதமர் என்ற முடிவுஇ சகல நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியினால் - தமது கட்சியின் மீதும் அக்கட்சி சேர்ந்துள்ள கூட்ட மைப்பின் மீதும் அதிக செல்வாக்குக் கொண்ட தலை வியினால் - எடுக்கப்பட்டும் கூடஇ அது முறியடிக்கப் பட்டிருக்கின்றது. தமிழர் ஒருவர் பிரதமராகும் வாய்ப்பு சுலபமாகத் தட்டிப்பறிக்கப்பட்டிருக்கின்றது.
பேரினவாதத்தின் செல்வாக்கும் இனவாதப் போக்கும் இந்த விவகாரத்தில் எவ்வளவு தூரம் உறுதியாக வெளிப்பட்டிருக்கின்றது என்பதிலிருந்து கதிர்காமர் பாடம் படித்துக்கொள்ளாவிட்டால் அவருக்கு இனிமேல் திருந்துவதற்கு வாய்ப்புக் கிடைக்கவே கிடைக்கமாட்டாது. எனினும் இனவாதத்தைக்கக்காத - அமைதி முயற்சியில் சிரத்தையுடைய - மிதவாதப் போக்குடைய - ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்திருப்பது ஓரளவு ஆறுதல் தரும் விடயந்தான்.
நாட்டில் வாழும் சகல இன மக்களும் பரஸ்பர நல்லுறவுடனும்இ சமாதானத்துடனும்இ அமைதியுடனும் வாழவேண்டும் என்பதே தனது நோக்கம் என்று கூறியிருக்கின்றார் புதிய பிரதமர்.
நீண்டகாலம் புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக விடுதலைப் புலிகளுடன் விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கவேண்டும் என்ற தமது விருப்பையும் அவர் வெளியிட்டிருக்கின்றார்.
அமைதி இல்லாமல் - சமாதானம் நிலவாமல் - நாடுபடும் கஷ்டம் தொடர்பான ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும்இ பேரினவாத சக்திகளின் பிடியில்சிக் குண்டிருக்கும் ஒரு கூட்மைப்பின் சார்பில் பிரதமராக இருந்துகொண்டு - அதுவும்இ அவரது சிறுபான்மை அரசைக் கவிழ்க் கக்கூடிய நிலையில் பௌத்த மதவெறியும் இனவாதப் போக்கும் கொண்ட சில சக்திகள் எதிரணியில் பலத் தோடும் எந்த நேரமும் தயார் நிலையில் நிற்கும் போது - இனவாதப் போக்கில் அதிகம் சிரத்தையற்ற புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைதி முயற்சிக்கு ஆக்கபூர்வமாக என்ன செய்துவிட முடியும்?
தமிழரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுத்துவிடமுடியும்? - என்ற கேள்வி எழும்புவது தவிர்க்கமுடியாததே.
இனவாத சக்திகளின் சகதிக்குள் சிக்கியிருக்கும் புதிய பிரதமர் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார்? - பொறுத்திருந்து பார்ப்போமே!
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>