04-07-2004, 09:12 AM
சபாநாயகர் பதவியை ஹெல உறுமய நிராகரிப்பு
13 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு விடுத்த கோரிக்கையை ஜாதிக ஹெல உறுமய நிராகரித்துள்ளது.
இந்தத் தேர்தலில் முதற் தடவையாக போட்டியிட்ட ஹெல உறுமய 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
தற்போது சிறுபான்மை அரசொன்றை அமைக்கும் நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருக்கையில், அவர்களது ஆதரவைப் பெறுவதற்காக அவர்களுக்கு சபாநாயகர் பதவியை வழங்க சுதந்திர முன்னணி முன்வந்தது.
எனினும், இதனை நிராகரித்துள்ள ஹெல உறுமய, தர்மராஜ்யத்தை உருவாக்குவதே தங்களின் குறிக்கோளெனத் தெரிவித்துள்ளது.
பதவிகளுக்காக தாங்கள் பாராளுமன்றம் செல்லவில்லை எனவும், சிலர் தங்களுக்குப் இந்தப் பதவிகளை வழங்க முன்வந்தாலும் அதனைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் இந்தக் கட்சியின் தலைவர் வண.எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார்.
இதேநேரம் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து சபாநாயகரொருவரைத் தெரிவு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்குவதா? அல்லது இல்லையா? என்பதை தகுந்த நேரம் வரும்போது முடிவு செய்வோமெனவும் தெரிவித்தார்.
கட்சியின் உயர் சபையைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் பாராளுமன்றத்திற்குச் செல்வர். மிகுதி மூவர் யார்? என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>