04-07-2004, 09:09 AM
தமிழ் கூýட்டமைப்பின் 20 எம்.பி.க்களும் ஏகமனதாக பாராளுமன்ற குழுத் தலைவராக சம்பந்தனை தெரிவு
பிரதேசவாதங்களுக்கு இடமில்லையென ஒருமித்த கருத்து
தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 20 பேரும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் கூýடிý, பாராளுமன்றக் குழுவின் தலைவராக தமிழர் விடுதலைக் கூýட்டணியின் செயலாளர் நாயகம் இரா.சம்பந்தனையும், உபதலைவராக மாவை சேனாதிராஜாவையும் தெரிவு செய்துள்ளனர்.
வடக்கு, கிழக்கிலிருந்து இம்முறை தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் சார்பில் 20 பேர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த 20 பேரும் நேற்று இரவு 8 மணியளவில் கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் கூýடிý தங்களின் எதிர்கால நடவடிýக்கைகள் குறித்து நீண்டநேரம் ஆராய்ந்துள்ளனர்.
இந்தச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், பாராளுமன்றக் குழுவின் தலைவரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழ்த் தேசியத்தின் அடிýப்படையிலும், வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற ரீதியிலும் எதுவித பிரதேச வேறுபாடுமின்றி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் நோக்கில் ஒருமித்துச் செயற்படுவதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
பிரிவினைகளுக்கோ அல்லது பிரதேச வேறுபாடுகளுக்கோ தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பில் இடமில்லை என்பது இங்கு அனைவராலும் வலியுறுத்தப்பட்ட அதேவேளை, இதுவரை காலமும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக முன்னெடுத்துச் செல்லப்பட்ட போராட்டத்தை மேலும் முனைப்புடன் கொண்டு செல்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மிகவும் அமைதியாகவும், சுமுகமாகவும் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் தேசியப் பட்டிýயல் உறுப்பினர்கள் இருவரையும் இன்று அல்லது நாளை தாங்கள் தெரிவு செய்து விடுவோம் என்பதையும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>