Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்குதமிழ்
#21
துயரங்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற தமிழரின் நம்பிக்கை குறைந்து வருகின்றது. பொங்கு தமிழ் செய்தியில் கிழக்கு பல்கலை. துணைவேந்தர்

நாட்டின் யுத்தம் ஓய்ந்து தமிழ் மக்களின் துயரங்களுக்கு விடிவு ஏற்படப்போகின்றது என்ற நம்பிக்கை இப்பொழுது கணிசமாகக் குறைவடைந்து செல்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பொங்குதமிழ் நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். மூக்கையா அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்குதமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் விக்கினேஸ்வரன் துணை வேந்தரின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:-

அனைத்து மக்கள் சமூகங்களும் சுயகௌரவத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ்வதற்கான உரிமைகளைக் கொண்டவர்கள் என்பதே நவீன உலகின் ஜனநாயக சிந்தனையின் அடித்தளமாகும். ஆனால், இலங்கை அந்நிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர் ஏற்பட்ட தேசிய அரசுகள் யாவும் தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளைப் புறக்கணித்து வந்துள்ளன. அதன் விளைவாக உருவான முரண்பாடுகளினால் கடந்த இரண்டு தசாப்தங்களாக பெரும்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தமது அபிலாஷைகள் புூர்த்திசெய்ய சமதான சூழ் நிலைகள் ஏற்பட்டுவிட்டன என்ற எண்ணத்துடன் கடந்த ஒன்றரை வருடகாலமாக வாழ்ந்துவரும் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் கனவாகிப் போய்விடுமோ என்ற ஆதங்கம் இன்று ஏற்பட்டுள்ளது.

சமாதானத்துக்கான முயற்சிகளுக்கு பல முரண்பாடான தடைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் எதிர்பார்த்த விளைவுகளை அரசினால் கொண்டுவர முடியாமல் இருக்கின்றது. இலங்கையின் இன்றைய அரசினால் சமாதானத்தை செயற்படுத்த முடியாதிருப்பதால் சமாதானத்தில் முழு நம்பிக்கை வைத்துள்ள தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்திடம் தமது நியாயத்தை எடுத்துக்கூறும் தேவை ஏற்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் பொங்குதமிழ் விழிப்புணர்வு நடவடிக்கை கடந்த 3 வருடங்களாக ஆண்டு தோறும் இடம்பெற்று வருவது தமிழ்மக்களின் நியாய புூர்வமான அபிலாஷைகளை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் நிகழ்வுகளாகும்.

இதன்மூலம், தமிழ்மக்கள் அஹிம்சை, சமாதானம் ஆகிய வழி முறைகளுக்கு இன்றும் ஆதரவானவர்கள் என்ற கருத்தை உலகெங்கும் பரப்ப வழி ஏற்படுகின்றது. இம்முயற்சிக்கு எனது ஆதரவும் பாராட்டும் என்றும் உரித்தாகும் - என்று உள்ளது.

பொங்குதமிழ் நிகழ்வில் உரையாற்றிய யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு.மோகனதாஸ் தனது உரையில் தெரிவித்ததாவது:-

இடம்பெயர்ந்த மக்களுக்கென அரசினால் வழங்கப்பட்டுவரும் நிவாரணம் எமது மக்களுக்கு போதுமானதாக இல்லை. அவர்களது அகதிவாழ்வு தொடர்கிறது. தமது சொந்த மண்ணில் வாழும் நிலை வரவேண்டும் என எதிர்பார்ப்பது அமைதி பற்றிப் பேசுவதற்கு அடிப்படையாகும். இடம்பெயர்ந்து அவதிப்படும் ஒவ்வொரு மக்களும் தமது சொந்த மண்ணில், சொந்த வீடுகளில், வாழுகின்ற பொழுதே சமாதானத்தின் உண்மை விழுமியத்தை அனுபவிப்பதாக அமையும் தொழில்வாய்ப்புகள் இன்றி மற்ற வரை நம்பிவாழும் நிலைமாறி தனது சொந்த மண்ணில் சொந்தத் தொழில் செய்து நிம்மதியாக வாழவேண்டும் என்று மக்கள் நினைப்பது நியாயமானதே.

இது ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் ஏற்றுக்கொண்ட அடிப்படை மனித உரிமையுமாகும். தமிழ்மக்கள் போருக்கான ஆர்வம் கொண்டவர்கள் அல்லர் என்பதை பொங்குதமிழ் எடுத்துக்காட்டி நிற்கிறது. அவர்களின் அன்றாட வாழ்வின் அவலத்தை நீக்குகின்ற சாத்வீக நடைமுறையாகவே இது அமைந்துள்ளது. எமது அடிப்படை உரிமைகள், விருப்பங்கள், அபிலாஷைகளை எடுத்து விளக்குவதே பொங்குதமிழ். இது தென்னிலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் எமது விருப்பத்தைச் சொல்லும் என்றார்.
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-20-2003, 07:39 PM
[No subject] - by sethu - 06-22-2003, 02:49 PM
[No subject] - by sethu - 06-22-2003, 02:50 PM
[No subject] - by P.S.Seelan - 06-25-2003, 12:50 PM
[No subject] - by sethu - 06-26-2003, 07:12 AM
[No subject] - by sethu - 06-26-2003, 07:13 AM
[No subject] - by sethu - 06-26-2003, 07:40 AM
[No subject] - by kuruvikal - 06-26-2003, 10:51 AM
[No subject] - by sethu - 06-26-2003, 12:20 PM
[No subject] - by P.S.Seelan - 06-26-2003, 12:52 PM
[No subject] - by mathe - 06-27-2003, 07:34 PM
[No subject] - by mathe - 06-27-2003, 07:36 PM
[No subject] - by mathe - 06-27-2003, 07:39 PM
[No subject] - by sethu - 06-27-2003, 07:41 PM
[No subject] - by S.Malaravan - 06-27-2003, 08:08 PM
[No subject] - by GMathivathanan - 06-27-2003, 11:14 PM
[No subject] - by P.S.Seelan - 06-28-2003, 03:56 AM
[No subject] - by P.S.Seelan - 06-28-2003, 04:01 AM
[No subject] - by sethu - 06-28-2003, 09:11 AM
[No subject] - by sethu - 07-04-2003, 05:56 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 06:34 PM
[No subject] - by sethu - 07-04-2003, 06:40 PM
[No subject] - by Mullai - 07-06-2003, 03:00 PM
[No subject] - by Mullai - 07-06-2003, 03:23 PM
[No subject] - by GMathivathanan - 07-06-2003, 07:42 PM
[No subject] - by sethu - 07-08-2003, 01:15 PM
[No subject] - by GMathivathanan - 07-08-2003, 01:22 PM
[No subject] - by Paranee - 07-08-2003, 01:26 PM
[No subject] - by GMathivathanan - 07-08-2003, 01:38 PM
[No subject] - by sethu - 07-09-2003, 07:25 PM
[No subject] - by GMathivathanan - 07-09-2003, 07:35 PM
[No subject] - by sethu - 07-11-2003, 08:01 PM
[No subject] - by GMathivathanan - 07-11-2003, 08:38 PM
[No subject] - by sethu - 07-12-2003, 09:11 AM
[No subject] - by GMathivathanan - 07-12-2003, 02:24 PM
[No subject] - by P.S.Seelan - 07-12-2003, 04:02 PM
[No subject] - by GMathivathanan - 07-12-2003, 08:04 PM
[No subject] - by GMathivathanan - 07-12-2003, 08:18 PM
[No subject] - by GMathivathanan - 07-12-2003, 09:05 PM
[No subject] - by kuruvikal - 07-12-2003, 10:32 PM
[No subject] - by GMathivathanan - 07-12-2003, 11:46 PM
[No subject] - by kuruvikal - 07-13-2003, 08:57 AM
[No subject] - by sethu - 07-13-2003, 09:19 AM
[No subject] - by P.S.Seelan - 07-13-2003, 02:13 PM
[No subject] - by Kanani - 07-13-2003, 05:43 PM
[No subject] - by S.Malaravan - 07-13-2003, 07:53 PM
[No subject] - by GMathivathanan - 07-13-2003, 10:01 PM
[No subject] - by P.S.Seelan - 07-14-2003, 08:39 AM
[No subject] - by GMathivathanan - 07-14-2003, 09:51 PM
[No subject] - by GMathivathanan - 07-14-2003, 09:54 PM
[No subject] - by P.S.Seelan - 07-15-2003, 12:20 PM
[No subject] - by GMathivathanan - 07-15-2003, 01:43 PM
[No subject] - by Paranee - 07-15-2003, 02:47 PM
[No subject] - by GMathivathanan - 07-15-2003, 02:58 PM
[No subject] - by P.S.Seelan - 07-15-2003, 03:18 PM
[No subject] - by Paranee - 07-15-2003, 03:55 PM
[No subject] - by GMathivathanan - 07-16-2003, 12:51 AM
[No subject] - by P.S.Seelan - 07-16-2003, 08:39 AM
[No subject] - by GMathivathanan - 07-16-2003, 09:08 AM
[No subject] - by P.S.Seelan - 07-16-2003, 09:22 AM
[No subject] - by GMathivathanan - 07-16-2003, 10:43 AM
[No subject] - by P.S.Seelan - 07-16-2003, 11:47 AM
[No subject] - by GMathivathanan - 07-16-2003, 03:41 PM
[No subject] - by P.S.Seelan - 07-19-2003, 06:14 PM
[No subject] - by GMathivathanan - 07-19-2003, 06:30 PM
[No subject] - by sethu - 07-19-2003, 06:33 PM
[No subject] - by sethu - 09-03-2003, 06:39 PM
[No subject] - by sethu - 09-03-2003, 06:40 PM
[No subject] - by Mathivathanan - 09-03-2003, 10:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)