04-06-2004, 07:16 PM
வெள்ளை வான், ஆட்டோவில் துரத்திச் சென்று மோட்டார் சைக்கிளில் சென்றோர்மீது சூடு
இருவர் படுகாயம், ஒருவர் கடத்தப்பட்டார்
மட்டக்களப்பு மாமாங்கம் புன்னைச்சோலை வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்த அதேநேரம், இவர்களில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம்பற்றி மேலும் தெரிய வருவதாவது:
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.20 மணியளவில் புன்னைச்சோலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரை, வெள்ளை வான் மற்றும் ஆட்டோ ஒன்றில் பின் தொடர்ந்து சென்றவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதனால், மாமாங்கத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் சிவகுமார் (30 வயது) என்பவர் தோள்பட்டை மற்றும் மணிக்கட்டில் படுகாயமடைந்த நிலையில், பின்னர் மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரா குபேந்திரா (32 வயது) என்பவர் துப்பாக்கி நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக இவரது மனைவி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதில் குபேந்திரா என்பவர் முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நீண்ட காலத்திற்கு முன்பே அதிலிருந்து விலகி புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட்டதுடன், 2001 இல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர். எனினும், தற்போது இவர் எந்த அமைப்புடனும் தொடர்புகளின்றி வாழ்ந்தவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கில் கருணா குழுவினரின் பிரதேசவாதத்தை இவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தவர்களென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>