04-06-2004, 07:13 PM
புதிய அரசாங்கத்திற்கு ம.ம.மு. ஆதரவு வழங்க வேண்டுமென கோரிக்கை
மலையக மக்கள் முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதோடு, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்று மலையக தொழிலாளர் முன்னணி, ம.ம.மு. தலைவர் பெ.சந்திரசேகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மலையக தொழிலாளர் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் முன்னணியின் துணைத் தலைவர் ரி.அய்யாத்துரை, உபதலைவர் பி.எஸ்.கிருர்;ணன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற பெருந்தோட்டத் தலைவர்கள், இளைஞர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்து இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் விபரம் வருமாறு:
இன்றைய நிலையில் மலையக தமிழர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும். இந்த நாட்டை ஆட்சி செய்த இரண்டு கட்சிகளையும் மதிப்பீடு செய்து பார்த்தால் மலையக தமிழர்களுக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கூýடுதலான சேவையாற்றியிருப்பது }லங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன ஐக்கிய முன்னணியுமே என்பதை நாம் அறிவோம்.
பொ.ஐ.மு.அரசாங்கமே பெருந்தோட்டப் பாடசாலைகளை அரச பாடசாலைகளாக்க நடவடிýக்கை எடுத்தது, பெருந்தோட்டப் பகுதிக்கு மின்சாரம் வழங்க நடவடிýக்கை எடுத்தது, மலையகத்திற்கு தமிழ் கிராமசேவகர்களை நியமித்தது, பெருந்தோட்டப் புறங்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களை நியமித்தது, பெருந்தோட்டப் புறங்களில் கிராம வீடமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, தோட்டப்புறங்களில் முகவர் தபால் நிலையங்களை அறிமுகப்படுத்தியது.
மேலும் புதிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதன் மூýலம் மாடிý வீட்டுத் திட்டத்தை உடனடிýயாக இரத்துச் செய்ய நடவடிýக்கை எடுத்தல், தோட்டப்புறத் தொழிற்சங்கங்கள் கம்பனிகளோடு செய்துள்ள கூýட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்தல். பெருந்தோட்டப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான கடனை இரத்துச் செய்தல் ஆகிய நடவடிýக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதேவேளை, தேயிலை சம்பள நிர்ணய சபையை மீண்டும் உயிர்ப்பித்தல், வரவு செலவுத்திட்டத்தின் மூýலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், மலையகத்தில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குதல், பெருந்தோட்டப்புறங்களில் தொழில்பேட்டைகளை அமைத்து வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்த்து வைப்பது ஆகிய கோரிக்கைகளை புதிய அரசாங்கத்திடம் முன் வைத்து அவற்றை வென்றெடுக்க வேண்டும் என்றும் சந்திரசேகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி - தினக்குரல்
சந்திரசேகரனின் கட்சி சந்திரிகாவுக்கு ஆதரவு? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>