04-06-2004, 05:48 PM
<span style='color:red'>சிறிலங்கா அரசியல் நிலவரங்களும்...தலைவர்களின் கருத்துக்களும்...!
சந்திரிகா கூட்டணியுடன் சேரும் எண்ணம் இல்லை - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொள்ளும் எண்ணம் எதுவும் இல்லையென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், கருத்து வெளியிட்டுள்ள கட்சியின் தலைமைப்பீடம் தாம் புதிய அரசியல் இணைந்துகொள்வதாக வெளிவந்த செய்திகளை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சிலர் தம்முடன் இணைந்துகொள்ளுமாறு நட்பு ரீதியாகவே உரையாடியதாக தெரிவித்த கட்சியின் தலைமைப்பீடம், உத்தியோகபூர்வமாக எவரும் தம்மை அணுகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
++++++++++++++++
தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது இப்போது கதிர்காமருக்குப் புரிந்திருக்கும் - மனோ கணேசன்
பிறப்பால் ஒரு தமிழர் என்பதை மறந்து கடந்த காலங்களில் செயற்பட்ட ஐனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான கதிர்காமருக்கு இப்பொழுது தான் ஒரு தமிழர் என்பது புரிந்திருக்கும் என, மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பெரும்பான்மையான வாக்குகளை அளித்ததன் மூலம், சிங்கள தேசிய இனத்தின் அரசியல் தலைமை இதய சுத்தியுடன் செயற்படாததை சிங்கள இனம் உலகிற்கு உணர்த்தியுள்ளது எனத் தெரிவித்த மனோ கணேசன் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஐபக்க்ஷவிற்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பும் தேர்தல் பிரச்சாரங்களின் போதும் லக்ஷ்மன் கதிர்காமரே பிரதமர் என தெரிவித்துவந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர், இப்பொழுது அவரை நியமிக்க பின்னடிப்பது அவர் ஒரு தமிழர் என்பதற்காகவே என்பது நிரூபணமாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் 113 ஆவது ஆசனங்களை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக காட்ட வேண்டிய முன்னணி, ஹெல உறுமயவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளுமேயானால், அது நாட்டின் சமாதானத்திற்கு முரணான தன்மையினை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
+++++++++++++++
தேர்தல் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்பதாக ரணில் தெரிவித்துள்ளார்
ஐக்கிய தேசியக் கட்சி நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தமைக்கான முழுப்பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொள்வதாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறினார்.
கிரிபொத்தவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்திலேயே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
உறுப்பினர்கள் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தான் தலைவணங்கத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் எம்.எச்.மொஹமட் பிரேரணை ஒன்றை முன்வைத்து பாராளுமன்றக் குழுவினர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாகவும், உடந்தையாகவும் செயற்படுவார்கள் என்று கூறினார்.
அப்பிரேரணையை முன்னாள் அமைச்சர் W.J.M. லொக்கு பண்டார வழிமொழிந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற நன்மை தீமைகளை அவதானித்து மிகச் சரியான, தீர்க்கதரிசனமான பயணத்தை முன்னெடுப்பதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>