04-06-2004, 03:18 PM
<span style='color:red'>மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன், சுப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்துள்ளார்
இன்று காலை 10:00 மணயளவில் கிளிநொச்சியிலுள்ள புலிகளின் சமாதான செயலகத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் திரு.சந்திரசேகரன் அவர்கள், விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
புதிய அரசாங்கம் அமைக்கப்படும் நிலையில் தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் கொழும்பிலுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக சந்திப்பின் பின்னர் சந்திரசேகரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
'முக்கியமாக தற்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலை,எத்தகைய நிலையை தமிழீழ விடுதலைப்புலிகள் எடுக்கின்றார்கள் என்பதை நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது என்னுடைய ஆர்வமாக இருந்தது.
தற்போது தெரிவுசெய்துகொண்டிருக்கிற 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் மலையக மக்கள் பிரச்சினைக்கும் குரல்கொடுக்கின்ற பாராளுமன்ற அங்கத்தவர்களாக செயற்படவேண்டும்.
என்பதை மலையக மக்கள் முன்னயின் சார்பாக முன்வைத்தேன் அரசியல்துறைப் பொறுப்பாளர் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுள்ளார். எனவே இன்று மலையக மக்கள் பிரச்சினைக்காக மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல். வடக்கு-கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இணைந்து கொடுக்கின்ற ஓர் அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கேள்வி:- விடுதலைப்புலிகள் என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்?
மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அரசியல் உரிமையில் பின்தங்கி வாழ்கின்ற ஒரு மக்கள் கூட்டம். ஆகவே அவர்களுக்காக குரல் கொடுக்கின்ற மனிதாபிமான கண்ணோட்டம் இருக்க வேண்டும். என்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.அதேபோல வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்காக மலையக மக்களும் குரல் கொடுக்கின்ற ஓர் நிலமை ஏற்படவேண்டும். அதனை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள்
கேள்வி:- தமிழ்க்கூட்டமைப்பு வெற்றி தொடர்பான தங்களது கருத்து என்ன?
நாம் பாராட்டுகின்றோம் வழக்கமாக தமிழீழ விடுதலைப்புலிகள் பயமுறுத்தலில் தான் மக்களை அடக்கி வைத்திருகிகன்றார்கள் என்று சொல்லப்பட்டது. வெறும் ஆயுதங்களை கையில் வைத்திருப்பதால் மக்கள் வாய் திறக்கமுடியாமல் அடங்கிப்போகின்றார்கள் என்று எல்லாம் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இப்பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தமது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தியுள்ளனர் எந்தவிதமான அச்சுறுத்தல் இல்லாமல் அனைத்து மக்களும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தை, அதைப்போன்று அவர்களது கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கிதை நிருபித்திருக்கின்றார்கள்.
கேள்வி:- கூட்டமைப்பு வெற்றிபெற்றுருக்கின்றது இது சமாதானத்திற்கெதிராக சிங்கள மக்களின் கருத்தாக நீங்கள் கருதுகின்றீர்களா?
சமாதானப்பேச்சு வார்த்தைக்கு எந்தளவிற்கு ஒத்துழைப்பார்கள் என்பதை விட பொதுஜன முன்னணி ஜே.வி.பி கூட்டும் சமாதனமாக தொடர்ந்து செயற்படுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. என நான் நினைக்கின்றேன் அவர்களுக்கிடையில் ஓர் கருத்தொற்றுமையில் ஆட்சியில் அமைதியாக, ஸ்திரமான ஆட்சியாக முன்னெடுக்க முடியாது என நாம் கருதுகிறோம்.
கேள்வி:-யாருடன் இணைந்து செயற்படப்போகிறீர்கள்?
எவருடனும் இணைவதில்லை ஆனால் தமிழர் கூட்டமைப்புடன் ஓர் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு செயற்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
கேள்வி:- தென்னிலங்கையில் எக்கட்சியை ஆதரிக்கவுள்ளீர்கள்?
எதனையும் ஆதரிக்கவில்லை அதிலும் குறிப்பாக தற்போது ஜனாதிபதி தலைமையிலான கூட்டமைப்பு ஆட்சியமைக்க மேற்கொண்டுவருகின்றது. ஆனால் இதுவரையில் ஜே.வி.பி நடைபெற்ற பேச்சுவார்தையில் ஏற்றுக்கொள்ளவுமில்லை அதைப்போலவே ஆரம்பம்போலவே விமர்சித்துக்கொண்டிருந்தார்கள். மிக அண்மையில் கூட கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள் விடுதலைப்புலிகளுடன் மட்டும் பேசுவதாக இருந்தால் அதற்கு உடன்பாடில்லை எனவே இப்படிப்பட்ட அந்த ஜே.வி.பி யுடன் இணைந்து இருக்கின்ற கூட்டமைப்போடு அரசியல் செய்வதென்ற பேச்சுக்கே இடமில்லை யு.என்.பியோடு நாங்கள் பேசிப்பார்க்கலாம் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்வதற்கு எந்த அளவிற்கு வாய்ப்புக்கள் உள்ளது, அதில் அவர்கள் எவ்வளவு உறுதியாகவுள்ளார்கள் என்பதை கேட்டு முடிவிற்கு வரலாம்."
=======================
மேல்மாகாண மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், சுப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்துள்ளார்
இன்று மாலை 5.00 மணியளவில், மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் திரு.மனோ கணேசன் அவர்கள், தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு.சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் புதிய அரசை அமைப்பதில் கொழும்பில் ஏற்பட்டுள்ள இழுபறிநிலை தொடர்பாகவுமே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
சந்திப்பின் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திரு.மனோ கணேசன், விடுதலைப்புலிகளுக்கும் தமக்கும் உள்ள உறவைப் பலப்படுத்தும் தமது தொடர்ச்சியான சந்திப்புக்களில் ஒன்றே இது என்றும், சந்திப்பு ஆக்கபூர்வமானதாகவும் சுமூகமானதாகவும் இடம்பெற்றது எனவும் கூறினார். கதைக்கப்பட்ட மேலதிக விபரங்கள் பின்னர் விபரமாக வெளியிடப்படுமென பத்திரிகையாளர்களுக்கு மேலும் தெரிவித்தார்.
திரு.மனோ கணேசன் நிருபர்களிடம் மேலும் தெரிவித்ததாவது:
'நிச்சயமாக இப்பொழுது வழமையாக எங்களுக்கு இருக்ககூடிய மேல்மாகாண மக்கள் முன்னணிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இருக்கக்கூடிய அந்த நல்லுறவை மேலும் உறுதிப்படுத்தும் முகமாக இன்றைய சந்திப்பு நடைபெற்றது என்று சொல்லவேண்டும்.
அதுமாத்திரமல்ல சிறிலங்காவில் நடந்திருக்கின்ற இந்தத்தேர்தல் முடிவுகள் சம்பந்தமாகவும் தென்னிலங்கையில் உருவாகக்கூடிய அரசாங்கம் சம்பந்தமாகவும் முக்கியமாக நாங்கள் முன்னெடுக்கப்படவேண்டிய அந்த சமாதான பேச்சுவார்த்தை மூலமாகவும் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தோம் அதுமாத்திரமல்ல பொதுப்படையான சில செய்திகளை நாம் கொழும்பிலிருந்து கொண்டுவந்திருக்கின்றேன்.
அந்தச் செய்திகள் தெரிவிக்கும்படி அங்கு இருக்கக்கூடிய பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எனக்கு விடுத்திருக்ககூடிய அந்த செய்திகளை இங்கு நான் திரு.தமிழ்ச்செல்வன் அவர்களிடம் தெரிவித்திருந்தேன் அவர்கள் அது தொடர்பான பதில்களையும் தெரிவித்திருக்கின்றார்கள்.
அதுமட்டுமல்ல சந்திப்பின்மூலம் மீண்டும் கொழும்பிலே மையமாக கொண்ட மேல்மாகாணத்திலே இன்று மேல்மாகாண மக்கள் முன்னணி உறுதியான முறையிலே அரசியல் ரீதியான எழுச்சிகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பதற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இம்முறை மிகவும் தீர்க்கரமாகவும் தெளிவாகவும் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.
அந்த ஆதரவை இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பாக அரசியல்துறைப்பொறுப்பாளர் திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெளிவான முறையிலே திட்டவட்டமாக உறுதி தந்துள்ளார். அந்த வகையிலே நாங்கள் மேல்மாகாண மக்கள் முன்னணியும், தமிழீழ விடுதலைப்புலிகளும் தேசிய விடுதலைப்போராட்டத்திற்கும், அவர்கள் முன்னெடுத்துச் செல்லக்கூடிய அரசியல் பேச்சு வார்த்தைகளுக்கு மீண்டும் உறுதிப்படத் தெரிவித்திருக்கின்றோம்." </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>