04-06-2004, 01:40 PM
மோகன் Wrote:சில விளக்கங்கள்.
-ஒரு இணையத்தளத்திற்கு வருபவர்கள் செய்யும் செயற்பாடுகள் (பார்க்கும் பக்கங்கள், படங்கள் போன்ற) அனைத்தும் பதிவில் எடுக்கப்படுகின்றன. அவ்வாறே யாழ் இணையத்திற்கு வருபவர்கள் அனைவரின் செயற்பாடுகளும் பதியப்படுகின்றது (இது ஒரு பிரத்தியேக செயற்பாடல்ல.வழமையான சேர்வர் செயல்பாடின் ஒருஅங்கமே). இந்த Log file என்னைத் தவிர இங்கு யாரும் பார்க்க முடியாது.
யாழ் இணையத்தில் முதல்பக்கத்தில் ஆக்கங்களை இணைக்க ஒரு சிறு script ம் databaseம் பாவிக்கப்படுகின்றது. முதிலில் குறிப்பிட்ட log file தவிர இங்கு இந்த databaseஇலும் சில விபரங்கள் சேகரிக்கப்படுகின்றது. அதில் குறிப்பிட்ட ஒரு ஆக்கத்திற்கு புள்ளி (rate) எவ்வெவ் IPயில் இருந்து வழங்கப்பட்டது என்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஆக்கத்திற்கு மீண்டும் அதே IPயில் இருந்து புள்ளி வழங்குவதைத் தடுக்கவே இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விபரங்களும் என்னைத் தவிர வேறு யாரும் பார்வையிட முடியாது.
கருத்துக்களத்தில் நான் (மோகன்), வலைஞன், யாழ் ஆகியோர் கருத்துக்களத்தில் வருபவர்களுடைய IPயினைப் பார்க்கமுடியும். ஏனைய மட்டுறுத்தினர்கள் எவரும் IP யினைப் பார்வையிட முடியாது.
சில மட்டுறுத்தினர்களுக்கு ஏனைய மட்டுறுத்தினர் யார் என்ற விபரம் தெரியாது. இதிலும் ரகசியம் பேணப்படவேண்டும் என விரும்பிப் பேணப்படுகின்றது.
அங்கத்தவர்கள் யாருடைய விபரமும் ஏனைய அங்கத்துவர்கள் கேட்டால் கொடுக்கப்படுவதில்லை. சிலர் மின்னஞ்சல் முகவரி கேட்டு குறிப்பிட்டவர்களின் அனுமதியைப்பெற்றுத்தான் மின்னஞ்சல் முகவரி கொடுத்துள்ளேன்.
இவ்வாறு அனைவரது தரவுகளின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படுகின்றது.
இங்கு கண்ணன் குறிப்பிட்டதற்கும் யாழ் இணையத்திற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. (அதாவது கண்ணன் யாழ் இணையத்தின், log file எதனையும் பார்க்கவில்லை). அவ்வாறு ஒரு சம்பவம் நடைபெற்றதா என நான் ஆராய்ந்து பார்க்கவும் இல்லை, பார்ப்பதும் இல்லை. ஆதலால் இதன் உண்மைத்தன்மை பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது. அப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருந்தால்கூட குறிப்பிட்ட ஒருவர்தான் இதனைச் செய்தார் என உறுதியாகச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வதென்றால் அதற்கான சட்ட நடவடிக்கைகள் மூலம்தான் உறுதிப்படுத்தலாம். கண்ணன் குறிப்பிட்டது போன்று 5 நிமிடத்தில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 200அல் அதிகரித்தது என்றால் அதை என்னால் உறுதிப்படுத்த முடியாது.
(யாழ் இணையத்தில் வரும் கட்டுரை, கதை, கவிதை போன்ற ஆக்கங்களை எத்தனைபேர் பார்வையிட்டார்கள், Most viewed Articles, Best Rated Articles போன்ற விபரங்கள் இடையில்தான் இணைக்கப்பட்டது. அப்படி இணைக்கும்போது "ஐயாயிரம் மார்க் அம்மா" என்னும் சிறுகதையே முன்னணியில் இருந்தது)
சோழியான் தனது கதைகளை யாழ் இணையத்தில் இருந்து நீக்கியது வருந்தத்தக்கது. மீண்டும் இணைப்பதும் இணைக்காததும் சோழியானின் விருப்பம்.
மேலே
கருத்துக்களத்தில் நான் (மோகன்), வலைஞன், யாழ் ஆகியோர் கருத்துக்களத்தில் வருபவர்களுடைய IPயினைப் பார்க்கமுடியும். ஏனைய மட்டுறுத்தினர்கள் எவரும் IP யினைப் பார்வையிட முடியாது. என்று குறிப்பிட்டது தவறான தகவல். மட்டுறுத்துனர்களும் அவர்களின் பகுதிகளுக்குள் ( அவர்கள் மட்டுறுத்துனர்களாக உள்ள பகுதி) எழுதப்படும் கருத்துக்களின் IP யினைப் பார்வையிட முடியும். மேலே குறிப்பிட்டதை எழுத முன் mohan என்று நான் பதிந்துள்ள பெயரிற்கு Super Moderator என்னும் நிலையினை வழங்கி பரீட்சித்துப்பார்த்தேன். ஆனால் எந்த ஒரு பிரிவிற்கும் Moderator ஆகக் கொடுத்திருக்கவில்லை. அப்படிப் பார்க்கும்போது யாருடைய IPயினையும் பார்க்கக்கூடியதாக இருக்கவில்லை. இதன் அடிப்படையிலேயே அக்கருத்தினை முன்வைத்தேன்.
நேற்று இங்கு களத்தில் அங்கத்துவராக உள்ள ஒருவர் எனக்கு தனிப்பட்டரீதியில் இதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அதன்பின்னரே குறிப்பிட்ட விடயத்தினை ஆராய்ந்து நான் தந்தது தவறான தகவல் என்பதைக் கண்டுபிடிக்கக்கூடியதாக இருந்தது. தவறான தகவல் தந்தமைக்கு இத்தால் எனது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
<b>கருத்துக்களத்தில் நான் (மோகன்), வலைஞன், யாழ் ஆகியோர் கருத்துக்களத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் வருபவர்களுடைய IPயினைப் பார்க்கமுடியும். ஏனைய மட்டுறுத்தினர்கள் அவ்வவ் பகுதிக்கு வருபவர்களுடைய IP யினைப் பார்வையிட முடியும்.</b>
தவறான தகவல் தந்தமைக்கு மீண்டும் இத்தால் எனது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

