04-06-2004, 01:14 PM
<span style='color:red'>மட்டு. - அம்பாறை கூட்டமைப்பு எம்.பி.க்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சி) அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் கூடவுள்ளனர்.
அதேசமயம், இன்றைய இந்தச் சந்திப்பில் தாங்களும் கலந்து கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் 20 எம்.பி.க்கள் தெரிவு செய்யப்பட்டனர். இரு போனஸ் ஆசனங்களுக்குரியவர்கள் இன்றைய கூட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் ஆட்சியமைக்கத் தாங்கள் ஆதரவு வழங்கப் போவதாக வெளியான செய்திகளை இவர்கள் முற்றாக மறுத்ததுடன் இவையெல்லாம் வெறும் வதந்தியே தவிர இதில் எதுவித உண்மையுமில்லையெனத் தெரிவித்தனர்.
இதேநேரம், நேற்றுக்காலை மட்டக்களப்பு, பெரிய உப்போடையில் கருணா குழுவைச் சேர்ந்த விசு மற்றும் துரை ஆகியோர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கூட்டமைப்பு எம்.பி.க்கள் நால்வரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குத் தெரிவான எம்.பி. எஸ்.ஜெயானந்தமூர்த்தி கலந்து கொள்ளாததும் குறிப்பிடத்தக்கது. </span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>