04-06-2004, 10:45 AM
<span style='color:red'>மட்டக்களப்பு சமகாலச் செய்திக் கோவை....!
'வன்னித் தலைமையை' தவிர்ப்போம்!
தேசியத்திற்காய் குரல் கொடுப்போம்!!
'வன்னித் தலைமையைத் தவிர்ப்போம்' என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு கருணாவிற்கு வந்த பிரதேச வியாதி எமக்கும் தொற்றிவிட்டதோ என்று நினைக்க வேண்டாம்.
விடயம் 'வன்னித் தலைமை' என்ற பதம் பற்றியதுதான். கருணாவிற்கு வருத்தம் முற்றிய பின்னர்தான் இந்தச் சொற்பதம் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியது. கருணாவைப் பொறுத்தவரை தனது பிரதேச வாதத்தை விற்பதற்கு இந்தச் சொற்பதம் தேவைப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனினும், இது போன்ற பதங்கள் குறுகிய பிரதேச வாதத்திற்கு முண்டு கொடுக்கும் எங்கள் பிரதேசக் கனவான்கள் சிலர் கருணாவிற்குச் சொல்லிக் கொடுத்த பதம் என்பதும் எமக்குத் தெரியாததல்ல. (இக்கனவான்களின் முகங்களை விரைவில் அம்பலமாக்கும் நோக்கோடு தகவல்களைத் திரட்டி வருகிறோம்)
ஆனால், பிரதேச வாதத்தை முற்று முழுதாக நிராகரித்து, ஒட்டுமொத்த தமிழ் தேசியத்திற்காகக் குரல் கொடுக்கின்ற எம்போன்றவர்களுக்கு தலைமை என்பது தேசியத் தலைமைதான். அது தற்போது வன்னியில் உள்ளது. முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்தது. தமிழீழத் தனியரசு அமைந்தவுடன் அது திருமலைக்கு மாறலாம். தலைமையின் இருப்பிடத்தை வைத்து அதனை வன்னித் தலைமை, மட்டுநகர் தலைமை எனக் கூறுபோட முடியாது என்பதே எமது நிலைப்பாடு. தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நிற்கின்ற அனைவரது நிலைப்பாடும அதுவாகத்தான் இருக்க முடியும்.
தமிழ் தேசியத்தை ஆதரித்து நிற்கின்ற சில வெகுசன ஊடகங்களும் 'வன்னித் தலைமை' என்ற பதத்தை அண்மைக்காலமாக பாவித்து வருவதைக் காண்கிறோம். அறியாது செய்யும் இந்தத் தவறை இனி தவிர்க்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
அதே நேரம் 'வன்னித் தலைமை' என்பதும், கிழக்கு அபிவிரித்தி என்பதும், வடக்கு கிழக்குப் பிரதேச வெறியும் கருணாவிற்கு ஏதோவொன்றை மறைப்பதற்கான கவசம் என்பது எமக்குத் தெரியாததொன்றல்ல. தனது பலவீனங்களை மறைப்பதற்கு கருணா கையிலெடுத்த முனை மழுங்கிய ஆயதம் அது.
இந்தக் குறுகிய பிரதேச வாதம் எமது மட்டு அம்பாறை மண்ணை முற்றாக தனிமைப்படுத்தி சிங்களம் எங்களை கபளீகரம் செய்வதை இன்னும் இலகுவாக்கும். எமது மக்களை எமது பிரதேசத்திலேயே சிறுபான்மையினராக்கும். பேரினவாதத்தின் ஆதரவு கொண்ட சக்திகள் எம்மீது ஆதிக்கம் செலுத்தவும் எம்மை அடக்கவும் பயன்படும். ஏற்கனவே பறிபோய் கொண்டிருக்கும் நிலத்தை மேலும் விழுங்கும். எமது பொருளாதார வலுவை சிதைக்கும். எம் அரசியற் பலத்தைக் குறைக்கும். இன்று சிங்கள இனவாதப் ஊடகங்கள் காட்டும் குதூகலத்தை வைத்தே இதனை விளங்கிக் கொள்ளலாம்.
கருணா முன்வைத்துள்ள பிரதேச வாதமும் வடக்கு கிழக்கு பிரிவினையும் எத்தகைய நீண்ட கால ஆபத்துக்களை எமது பிரதேசத்திற்கு ஏற்படுத்தும் என்பதைச் சிந்திக்க முடியாத குறும்பார்வைக் கோளாறு படைத்தவர்களும் இதுவரை காலமும் பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்ந்து நின்று பதவிச் சுகம் கண்டவர்களுமே ஆதரித்து நிற்கின்றனர்.
இருபது வருடங்களாக அம்மான் தமிழ் தேசியத்திற்காக ஆயுதமேந்திப் போராடினாராம். திடீரென ஒருநாள் அவருக்கு மட்டுநகர் அபிவிரித்தி பற்றியும், வடக்கு மாகாணம் கிழக்கின்மீது ஆளுமை செலுத்துவது பற்றியும், போதி மரத்தடியில் ஞானோதயம் வந்ததாம். உடனே தமிழ் தேசியத்தை தூர எறிந்துவிட்டு வடக்கோடு சண்டைக்கு நிற்கிறாராம் இந்த முன்னாள் தளபதி. நாமும் அவரோடு சேர்ந்து கூச்சலிடவேண்டுமாம். யாருக்கு அம்மான் கதையளக்குகின்றீர்கள்?
நீங்கள் கதைப்பது அவ்வளவும் பொய் என்று உங்களுக்கே தெரியும். பிறகு எதற்கு இந்த முக்காடு? ஏனிந்தக் கூச்சலும் குழப்பமும்.
சிங்கள இனவாதம் எமது மண்ணை சூறையாடி வருவதையும், பொருளாதார ரீதியாக எமது மண் திட்டமிட்டுப் பின்தள்ளப்பட்டுள்ளதையும் நன்கறிந்தவர் நீங்கள். வடக்கையும் கிழக்கையும், கிழக்கில் தமிழரையும் முசுலிம்களையும் பிரிப்பற்கு தொடர்ந்து வந்த சிங்கள அரசுகள் செய்த அத்தனை சூழ்ச்சிகளையும் நேரில் பார்த்தவர் நீங்கள். வடக்கும் கிழக்கும் இணைந்த தாயகக் கோட்பாடே தென் தமிழீழத்தவரின் பாதுகாப்பிற்கான அடிப்படை என்பதையும் எமக்குச் சொல்லித் தந்தவர் நீங்கள். இன்று எதனை மறைப்பதற்காக இந்த பிரதேச கோசம்? அதைச் சொல்லுங்கள் முதலில்
மாறி மாறி வந்த சிங்கள அரசுகளும் ஆக்கிரமிப்புப் படைகளும் செய்ய முனைந்து தோற்றுப் போனதை நீங்கள் செய்யத் துணிவதே இன்று உங்களை மட்டு அப்பாறை மண்ணின் எதிரி என்று முத்திரையிட போதுமானது. உங்களுக்கு மட்டு அம்பாறை மீது உண்மையான அக்கறையிருந்தால் மட்டு அம்பாறையை விட்டு விலகி ஓடுங்கள். மட்டு-அம்பாறை மண்ணிற்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி அதுதான்.
-போராளி அறிவொளி
படுவான்கரைப்பிரதேசத்தில் பரவலாகத் துண்டுப்பிரசுரங்கள்
படுவான்கரைப் பிரதேசத்தில் மட்டக்களப்பு இளைஞர் சமூகம் என்ற அமைப்பினால் இன்று துண்டுப்பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் ராஜன் சத்தியமூர்த்தி அவர்களைக் கொலை செய்யவந்த கொலையாளி 25 நிமிடங்களுக்கு மேல் அவரோடு அளவளாவியிருந்ததாகவும், அந்தக் கொலையாளி சத்தியமூர்த்திக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவராகவும் இருந்ததையும் சுட்டிக்காட்டிய ஒரு பிரசுரம் சத்தியமூர்த்தியின் மைத்துனரான கனகசபை கொலையாளியை அடையாளம் கண்டுகொண்ட படியால் தான் அவரும் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறது.
ராஜன் சத்தியமூர்த்தி இறுதி நாட்களில் விடுதலைப்புலிகளின் தலைமையோடு இரகசிய தொடர்புகளை ஏற்படுத்தினார் என்பதை அறிந்துகொண்ட கருணா குழுவினரே இந்தக் கொலைகளைச் செய்திருக்கவேண்டும் என்றும் இந்தப் பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாவட்டத்துத் தமிழ் வர்த்தகர்களை வெளியேற்றியதன் பக்கவிளைவாக பல மட்டு அம்பாறை தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
சிங்கள இராணுவத்தினரும் செய்யத்துணியாத இழிசெயல்களைச் செய்யும் கருணா குழுவினரை மக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
மட்டு அம்பாறை தமிழ்த் தேசிய பாராளுமன்றினர் கருணா குழுவால் மிரட்டல்
கருணாவின் சகாக்களினால் வற்புறுத்தலின் பேரில் தமிழ்த் தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்துசெல்லவேண்டும் என வற்புறுத்தப்பட்டுள்ளதாக நம்பகமான கட்சி வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன.
மிகுதி விபரங்கள் நாளை அல்லது நாளை மறுதினம் பகிரங்கமாக்கப்படலாம்.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது எத்தகைய வெருட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன என்ற விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் அறியத்தருவோம்.
எது எவ்வாறாயிருப்பினும்ஈ கருணா குழுவினால் அரசியல் காய்நகர்த்தல்களைச் செய்வதற்கு இந்த உறுப்பினர்கள் பயன்படவேண்டிய தேவை கொழும்பில் நிலவுவதாகத் தெரியவில்லை.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மீது கருணா குழு தாக்குதல்
மட்டக்களப்பு நகருக்கு அருகாமையில் ஒரு பெற்றோல் நிலையத்தடியில்வைத்து வானில் வந்த கருணா குழுவின் பிள்ளையான் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்ததாகவும். அந்த இளைஞர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
மற்றைய இளைஞர் காயமடைந்தாரா காயத்தினால் மரணமடைந்தாரா என்பது தெரியவில்லை. அவர் வானில் ஏற்றப்பட்டதாகவும் அந்த வான் கரடியனாறு பகுதி நோக்கி விரைந்ததாகவும் தெரியவருகிறது.
கேள்விகேட்ட கடை உரிமையார் மிரட்டப்பட்டார்
அக்கரைப்பற்றில் கருணா குழுவின் ஸ்...லி என்ற பொறுப்பாளர் விடுதலைப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக் கதைத்ததைப் பார்த்துக்கொண்டிருந்த
தேசப்பற்று மிக்க கடை உரிமையாளர் ஒருவர் நெஞ்சுபொறுக்காமல் எதிர்த்துக் கேள்விகளை எழுப்பினார். அதைத் தொடர்ந்து அவர் துரோகி என வர்ணிக்கப்பட்டு கடுமையாக மிரட்டப்பட்டார். ஆனாலும் அந்தத் தேசப்பற்றாளன் அஞ்சவில்லை.
தலைவரையே துரோகி என வர்ணிக்க நா கூசாதவன் என்னைத் துரோகியென சொல்வதையிட்டு நான் ஒன்றும் அதிசயப்படவில்லை எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து கூட்டம் கூடியதை அடுத்து கருணா குழுவினர் அகன்று சென்றனர். </span>
நன்றி...தமிழ் அலை நிழற்பதிப்பு...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>