04-06-2004, 10:30 AM
<span style='color:red'>புதிய அரசு விரும்பினால் பேச்சு தொடரும்: புலிகள்
ஜெனிவா:
புதிதாக அமையவிருக்கும் இலங்கை அரசு எங்களுடன் பேச்சு நடத்த விரும்பினால், நாங்களும் பேச்சுவார்த்தையைத் தொடர்வோம் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்களின் வருடந்தார அணிவகுப்பில் புலிகளின் பிரதிநிதியாக இளையதமி கௌசல்யன் கலந்து கொண்டார். இதில் ஐரோப்பா முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் திரளாக வந்து பங்கேற்றனர்.
பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் ஐரோப்பியத் தலைமை அலுவலகத்தில் கௌசல்யன் நிருபர்களிடம் பேசுகையில்,
அமைதிப் பேச்சுவார்த்தையின் எதிர்கால நிலை குழப்பமாகத்தான் உள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற தேர்தல் தொங்கு நாடாளுமன்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. நிலையான அரசு ஏற்படாத நிலையில், பேச்சுவார்த்தை எப்படியிருக்கும் என்பதைக் கூறுவது கடினமே.
புதிதாக அமையவிருக்கும் அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தால், நாங்கள் அதற்குத் தயாராக உள்ளோம். இலங்கையில் மீண்டும் அமைதி நிலவ வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பி அமைதியாக வாழ வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் என்றார். </span>
thatstamil.com....india

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>