04-06-2004, 08:09 AM
மட்டக்களப்பு கூட்டமைப்பு எம்.பிக்களும் தமிழ்த்தேசியத்துக்கே பாடுபடுவார்கள்
கருணாவின் துரோகத்துக்குத் துணைபோகமாட்டார்கள் என்கிறார் தமிழ்ச்செல்வன்
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களி;லிருந்து தெரிவான தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் கருணாவின் பிரதேசவாதத்துக்கு எடுபடமாட்டார்கள். அவரின் துரோகத் துக்குத் துணைபோகமாட்டார்கள். தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி அளிக்கப் பட்ட அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவார்கள். தமிழ்த் தேசி யத்துக்காகப் பாடுபடுவார்கள் என் றார் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல் வன். பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கிளிநொச் சியில் தமிழ்ச்செல்வனைச்சந்தித்துப் பேசினார் உதயன் செய்தியாளர். அப்போதே தமிழ்ச்செல்வன் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு உதவுவீர்களா? என்று கேட்டபோது ஷஷஆட்சி அமைக்க இரண்டு பிரதான கட்சிகளுக்குமே அறுதிப் பெரும்பான்மை கிடையாது. நிலை மையை அவதானித்து வருகிறோம்|| என்றார் தமிழ்ச்செல்வன்.
சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்க ளிலிருந்து தெரிவான தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களின் ஆதரவைப் பெறுவதற்குக் கருணாமூலம் முயற்சிகள் மேற்கொள் ளப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
இது பற்றித் தமிழ்ச் செல்வனி டம் கேட்டபோது அவர் அந்த எம்.பிக்கள் கருணா வின் பிரதேச வாதத்துக்கு எடுபடமாட் டார்கள். அதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். கருணாவின் துரோகத் துக்கு துணைபோகவும் மாட்டார்கள். தமிழ்த் தேசியத்துக்காக அவர்கள் அர்ப்பணிப்புடன் உழைப்பார்கள் என்றார்.
புதிய அரசு சமாதானப் பேச்சுக்களுக்கு அழைத்தால் போவீர்களா? என்று கேட்டபோது, அந்த அழைப்பு அனுசரணையாளர்கள் மூலம் வர வேண்டும். வந்தால் பார்க்கலாம் என்ற தோரணையில் பதில் அளித் தார் தமிழ்ச் செல்வன்.
அவரிடம் கேட்கப்பட்ட மற்றும் கேள்விகளும் அவர் அளித்த பதில் களும் வருமாறு:-
கேள்வி:- ஐ.தே.க. அரசுடன் பேச்சு நடத்தியது போன்று புதிய அரசுடன் பேச்சுக்களைத் தொடாவீர்களா?
பதில்:- எம்மைப் பொறுத்தமட்டில் நிதானமாக நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். தெற்கில் யாரும் ஆட்சி அமைக்கக் கூடிய அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. இருதரப்பினரும் சிறு பான்மைக் கட்சிகளோடு தொடர்பு களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின் றன. யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் நாங்கள் தற்சமயம் எந் தத் தீர்க்கமான முடிவையும் எடுக்க வில்லை. நிச்சயமாக தமிழ்மக்களின் நலன்கள், எதிர்காலம் ஆகியன தொடர் பாகத் தீர்க்கமான முடிவை எமது தலைமை எடுக்கும். தற்போது சூழ நிலையை அவதானித்துக் கொண்டி ருக்கின்றோம்.
கே:- ஆட்சி மாற்றம் தொடர்பாக விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு என்ன?
ப:- தெற்கில் யார் பலமான ஆட் சியை அமைக்கிறார்கள் என்பதைப் பார்த்துத்தான் எமது முடிவை எடுப்போம். எப்படியான ஆட்சி அமை யும் என்பதை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
கே:- பேச்சுக்களை மீள ஆரம்பிப் பது தொடர்பாக ஜனாதிபதி சந்தி ரிகா தரப்புத் தொடர்பு கொண்டுள் ளதா?
ப:- இதுவரை எந்தத் தொடர்பை யும் ஏற்படுத்தவில்லை. பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான தொடர்புகளை யும் எவரும் எம்முடன் ஏற்படுத்த வில்லை.
கே:- தேர்தலுக்கு முன் சந்தி ரிகா தரப்பு விடுதலைப்புலிகளுடன் ஏதாவது தொடர்புகளை வைத்ததா?
ப:- தேர்தலுக்கு முன் அவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ள முயன்றி ருக்கின்றார்கள் பல பக்கங்களால் முயற்சிகள் எடுத்தார்கள். பேச்சுக்களாக இருந்தால் என்ன சமாதான முன்னெடுப்பாக இருந்தால் என்ன அனுசரணையாளர் ஊடாகவே அது இடம்பெறும். இதில் நாம் மிக வும் உறுதியாக இருக்கின்றோம்.
கே:- தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் எப்படிச் செயற்ப டும்?
ப:- கூட்டமைப்பினர் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ள னர். தமது நிலைப்பாட்டைத் தெளி வாக வெளியிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளை ஏகப் பிரதி நிதிகளாக ஏற்றுக்கொண்டு விடுத லைப் புலிகளுடன் பேசி தமிழ மக் களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காணவேண்டும். என்றும் இடைக்கால நிர்வாக சபை - குறித்து முடிவு செய்யவேண்டும் என்றும் தமிழ்க் கூட்டமைப்பினர் தேர்தல் பிரகடனத் தில் கேட்டிருந்தனர். அதற்கு மக் கள் ஏகோபித்த அளவுக்கு என்று மில்லாதவாறு ஆணையை வழங்கி யிருக்கிறார்கள். இதை சகல தரப்பி னரும் புரிந்துகொள்வர் என நினைக் கிறேன்.
கே:- விடுதலைப் புலிகள் முன் வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை ஏற்கக் கூடாது என்று ஹெல உறுமய நிபந்தனை விதித்து அரசுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. இத்தகைய நிபந் தனையுடன் அரசுக்கு ஹெல உறுமய ஆதரவு வழங்குவதால் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் பேச்சு இடம் பெறும் என நம்புகிறீர்களா?
ப:- இது பற்றி அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எம்மைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் தெளி வான ஆணையை வழங்கியிருக்கிறார் கள். தெளிவாக ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்கள். ஆகவே எமது மக்களின் எதிர்காலம், நலன்கள், என்ற அடிப்படையில் எமது தலைமை முடிவை எடுக்கும். அந்த அடிப்படை யில் தமிழ்க் கூட்;டமைப்பும் ஆதரவை யும் ஒத்துழைப்பையும் வழங்குமென நம்புகிறோம்.
கே:- போர்நிறுத்த உடன்பாட் டின் நிலை?
ப:- சர்வதேச அனுசரணையாளரின் பங்கோடு போர்நிறுத்த உடன்பாடு உருவாக்கப்பட்டது. அதனால்தான் யுத்தநிறுத்தம் செம்மையாக நடை முறைப்படுத்தப்படுகின்றது. யுத்த நிறுத்தம் தொடர்ந்தும் செம்மையா கவும், சீராகவும் முன்னெடுக்கப்பட வேண்டுமானால் எவர் ஆட்சிப் பீடம் ஏறினாலும் அதை முழு அளவில் ஏற்கொள்ள வேண்டும்.
கே:- போர் நிறுத்த உடன்பாட் டில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என ஜே.வி.பி. கூறுகின்றது. அப்ப டியானால் உடன்பாட்டில் மாற்றம் செய்ய நீங்கள் தயாரா ?
ப:- கடந்த இரண்டரை வருடங் களாக இலங்கைத் தீவில் மக்கள் அமைதியை அனுபவிக்கிறார்கள். அபிவிருத்தியையும் முன்னேற்றத் தையும் அனுபவிக்காவிட்டாலும் அமை தியை அனுபவிக்கிறார்கள். இதற்கு அடிப்படை இந்த யுத்தநிறுத்தம் தான். இந்த யுத்தநிறுத்தத்தில் கைவைத்து அதில் குழப்பங்கள் ஏற் படுத்த மீண்டும் இந்த அமைதியைக் குலைக்க முனைவதை எந்த மக்களும் விரும்ப மாட்டார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.
கே:- யுத்தநிறுத்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பீர்களா?
ப:- நிச்சயமாக தொடர்ந்து யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிப்போம். அதில் எந்த வித மாற்றமும் இருக் காது.
கே:- கருணாவின் நிலைப்பாடு குறித்துத் தாங்கள் எந்த நடவடிக்கை எடுக்கிறீர்கள்?
ப:- கருணா மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறார். எமது இயக் கத்தின் ஒழுங்கு முறைப்படி இன் றைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நிதானமாகச் சில நடவடிக் கைகளை எடுத்துக்கொண்டு வரு கிறோம். மிகவிரைவில் அதற்கான தீர்க் கமான முடிவுகளை எட்டி விடுவோம் எனக்கருதுகின்றேன்.
கே:- மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சார்பாகத் தெரிவான எம்.பிக்களை சந்திரிகாவுக்கு ஆதரவாகச் செயற்படுமாறு கருணா வற்புறுத்து வதாகச் செய்திகள் வருகின்றன. அது குறித்து.....?
ப:- இது அவ்வளவு சாத்தியமான தாக இருக்குமென நாம் நம்பவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதனைப் பிரகடனம் செய்து வாக்குறுதியைக் கொடுத்து மக்களிடம் வாக்குக் கேட் டார்களோ அந்த அடிப்படையில்தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள். அந்த மக்கள் தமிழத்தேசியத்தின் தலை மையில் தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்டு, தமிழ்மக்களின் எதிர்காலத் துக்காக முன்னெடுக்கப்படும் அனைத் துப் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாகத்தான் வாக்களித்துள் ளனர். அந்த அடிப் படையில்தான் மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்துள் ளனர். கருணாவின் பிரதேச வாதத் துக்கும் அவரது மோசடிகளுக்கும் துணை போவதற்கு இவர்களை மக் கள் தெரிவுசெய்யவில்லை. அந்த அடிப்படையில் அவர்கள் தமிழ் தேசி யத்துக்கு அர்ப்பணிப்புடன் உழைப் பார்கள் என்றே கருதுகிறேன்.
கே:- மட்டு - அம்பாறையிலிருந்து போராளிகள் வன்னிக்கு வருகிறார் களா?
ப:- நிறையப் போராளிகள், பொறுப் பாளர்கள் எனப் பெரும் அளவில் வந்துகொண்டிருக்கிறார்கள். யார் யார் வருகிறார்கள் என்ற தகவலை விரைவில் வெளியிடுவோம். சில நடவடிக்கைகளை மேற்கொள்வதால் பெயர் விவரங்களை வெளியிட விரும்ப வில்லை.
கே:- மட்டக்களப்பிலிருந்து யாழ்ப் பாணத்தவர்கள் வெளியேற்றப்பட்டு இக்கட்டான சூழ்நிலை அங்கு நிலவு கிறது. அதுபற்றி...?
ப:- இது கருணாவின் காடைத்த னம். அவரின் வெறித்த னமும், பிர தேசவாத துவேசமும் தான் இதற் குக் காரணம் அவரின் காடையர்களால் இது நடத்தப்படுகிறது. இதை மட்டக் களப்பு மக்க ளோ வேறு எவருமோ விரும்பவில்லை. யாழ்ப்பாணத்த வரை வெளியேற்றியது மட்டுமல்லாமல், அங்குள்ள தேசியப்பற்றுள்ள, தேசப ;பற்றுள்ள உணர்வுள்ள எல்லோரை யும் அச்சுறுத்தித் தாக்கியும் வருகி றார். பல்வேறுபட்ட நிகழ்வுகள் அங்கு நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றுக் கெல்லாம் கருணாதான் காரணம். மிகவிரைவில் நிச்சயமாக அவரை எமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்தவுடன் மக்கள் மீள நிம்மதிய டைவர்.
-இவ்வாறு தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>