04-06-2004, 07:44 AM
vasisutha Wrote:http://www.tamilwebradio.com ல் போட்டிருக்கு. ஆனால் முழுமையான செய்தி கிடைக்கவில்லை.
இந்த செய்தியை நண்பர் ஒருவரும் சொன்னார்.
கருணாகுழுவினரால் கிங்ஸ்லி சுட்டுக்கொலை.
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளருமான பாவா அவர்களும் மற்றுமொரு போராளியும் கருணாவை விட்டு விலகி வன்னி சென்றுள்ளார் என ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டு அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றிய பாவா அவர்களின் வெளியேற்றமானது கருணா தரப்பை மிகவும் தாக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதன் எதிரொலியாக பாவா அவர்களின் சகோதரரை திருக்கோவில் பகுதியில் வைத்து கருணா குழு சுட்டுக்கொன்றுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராக இருந்த கிங்ஸ்லி அவர்கள் பின்னர் அமைப்பைவிட்டு விலகி குடும்பவாழ்வில் ஈடுபட்டுவந்தார். இவரை விடுதலைப்புலிகளின் தலைமையுடன் தொடர்பு என்ற சந்தேகத்தில் கருணா குழுவினர் சுட்டுக்கொன்றுள்ளதாக அறியப்படுகிறது.
இவை தொடர்பான தகவல்கள் விரைவில் தரப்படும்.
(இச்செய்தியானது பதியப்பட்ட நேரம் ஐரோப்பிய நேரம் 17.47)
- தமிழ்வெப்றேடியோவுக்காக புளியம்தீவிலிருந்து முகுந்தன் -
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

