04-06-2004, 01:54 AM
Eelavan Wrote:\BBC Wrote:வட, கிழக்கு தேர்தலை இரத்தாக்க வலியுறுத்துகிறது ஜாதிக ஹெல உறுமய
வட, கிழக்கில் இடம் பெற்றது தேர்தல் அல்ல. பிரபாகரன், கருணாவின் பயங்கரவாதமே இடம்பெற்றுள்ளது. எனவே, தேர்தல்கள் ஆணையாளர் இதனை இரத்துச் செய்து மீண்டுமொரு தேர்தலை அங்கு நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஓமல்பே சோபித தேரர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்கு கூறியதாவது:
ஜனநாயக சூழ் நிலையில் வட, கிழக்கில் தேர்தல்கள் இடம் பெறவில்லை. முழுக்க முழுக்க பயங்கரவாதமே அங்கு இடம் பெற்றது. எனவே, தேர்தல்கள் ஆணையாளர் இதனை இரத்துச் செய்து சர்வதேச மத்தியஸ்தத்துடன் தேர்தலை மீண்டும் அங்கு நடத்த வேண்டும்.
இப் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள் வாக்களித்துள்ளனர். இது தொடர்பான ஆதாரங்கள் இருக்கின்றன. பகிரங்கமாக திருட்டு வாக்கு அளித்துள்ளனர்.
ஐ.தே.கட்சி நாட்டில் சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. வெறுமனே ஒரு மாயையைத்தான் கொண்டு சென்றது. இதனை மக்கள் இன்று நிராகரித்துள்ளதோடு புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற ஐ.தே.கட்சியின் நிலைப்பாட்டையும் அவர்களை தேர்தலில் தோல்வியடையச் செய்ததன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்று ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா தமது வாக்கை அளிப்பதற்காக சிங்கள இராணுவத்தின் பாதுகாப்புடனேயே செல்ல வேண்டியுள்ளது. அந்தளவிற்கு தமிழர்களின் விரோதிகளாக தமிழர்களே மாறி விட்டனர்.
ஜனாதிபதியும், ரணிலும் புலிகளுடன் பேச வேண்டுமென்கிறார்கள். எதற்காக பேச வேண்டும் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இது போன்றதொரு சூழ்நிலையில் ஹெல உறுமய பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து தோல்வியடையச் செய்யும்.
ஹெல உறுமயவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப ஏதும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமானால் ஆதரிப்போம். ஆனால், எதற்காக பேசுகிறார்கள் என்பது தெளிவு படுத்தப்பட வேண்டுமென்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
நன்றி - தினக்குரல்
இவர்களால் தர்மராஜ்யத்தை உருவாக்க முடியுமா என்பதுதான் கேள்வி
இவ்வளவு நாளும் அரசியலில் தலையிட்டு வந்தார்கள் இன்று அவர்களே வந்துவிட்டார்கள் தர்மராஜ்ஜிய ஸ்தாபிப்பு என்ற பெயரில் இரத்தக்களரி காணாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது
அசோகச்சக்கரவர்த்தியே கலிங்கப் போரில் வெறுப்புற்று அன்பு அகிம்சை சகிப்புத்தன்மை போதித்த பௌத்த மதத்தை தழுவினார் என வரலாறு கூறுகின்றது
அவரால் ஸ்தாபிக்க முடிந்ததுதான் தர்மராஜ்ஜியம் இன்று இவர்கள் வேண்டி நிற்பது ?
புத்தரின் பெயரால் (in the name of budhdha)என்ற திரைப்படம் தான் ஞாபகம் வருகிறது
-------------------------------------------------
தர்மமா??? அது என்கிருக்கிறது இலங்கையில்.. அவர்களின் பாசையில் தர்மமெண்டா விகாரைக்குள்ள பெண்களை வைத்து கேளிக்கையில் ஈடுபடுவது, பல்கலைக்க்ழகம் சென்று ஓசியில் காவி உடுத்தி படித்துவிட்டு முடிந்தவுடன் எல்லாத்தையும் கழட்டி எறிந்துவிட்டு ஒடுவது, அரசியல்வாதிகளுக்கு எப்படி தமிழனுக்கு அடிக்க வெட்ட வேண்டும் என்று சொல்லுவது --- மொத்ததில் இரத்தக் கறை காண்பதே அவ்ர்களின் தர்மம்... இவர்களெல்லாம் தர்மவான்கள் என்டு ரோட்டுக்கு வந்திட்டார்கள், அவ்ர்களை தூக்கிவைத்தாட ஒரு பொரிய கூட்டமே அங்க இங்க என்டு அலையுது...அட போங்கப்பா இவங்களும் இவங்கட ஆட்டமும் இனி எங்க போய் முடியப்பொகுதோ தெரியாது... :twisted:
புத்தர் இப்ப இருந்தா தன்ன தானே வெட்டிச் செத்திருப்பார்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
...... 8)

