04-05-2004, 11:36 PM
இலங்கையின் புதிய பிரதமராக ராஜபட்ச நியமனம்
இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபட்சவை (58) அதிபர் சந்திரிகா குமாரதுங்க திங்கள் இரவு தேர்ந்தெடுத்தார்.
கலைக்கப்பட்ட மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் ராஜபட்ச. அவரைத் தனது அரசு இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை காலையில் வரும்படி அதிபர் அழைத்துள்ளார். அங்கு ராஜபட்சவுக்குப் பதவிப் பிரமாணம் செவ்வாய்க்கிழமை காலையில் முறைப்படி செய்து வைக்கப்படும்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் சந்திரிகாவின் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி 105 இடங்களைப் பெற்றதை அடுத்துஇ சில கட்சிகளின் ஆட்சியுடன் அரசு அமைக்க முயன்று வருகிறது. இந்நிலையில் அதிபரின் வலதுகரமான முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் (71) பிரதமராவார் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் அதற்கு ராஜபட்ச கடும் ஆட்சேபம் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக உலக நாடுகள் தடை விதிக்கப் பெரிதும் காரணமாக இருந்தவர் கதிர்காமர். ராஜதந்திரி என்ற பெயரைப் பெற்றவர். ஆனால் நாடாளுமன்றத்தில் அவர் நுழைந்து பத்தாண்டுகள்தான் ஆகின்றன. மேலும் மக்கள் செல்வாக்கைப் பெறாதவர்.
ஆனால் வழக்கறிஞரான ராஜபட்ச 1971 முதல் அரசியலில் ஈடுபட்டு வருபவர். அத்துடன் மக்களிடமும் கட்சித் தொண்டர்களிடமும் செல்வாக்கு பெற்றவர்.
பிரதமர் பதவியில் யாரை சந்திரிகா நியமிப்பார் என்ற கேள்வி எழுந்தபோது கட்சியின் இளைஞர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம் என்று யோசனை கூறினர்.
தென் இலங்கையில் உள்ள ராஜபட்ச வெற்றி பெற்ற ஹம்பன்தோட்ட தொகுதியில் அவரது ஆதரவாளர்கள் அவரையே பிரதமராக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தினமணி

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>