04-05-2004, 11:33 PM
மஹிந்த ராஐபக்ஷ, சிறீலங்காவின் 13வது பிரதம மந்திரியாக நியமனம்
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ திங்கட்கிழமை, 05 ஏப்பிரல் 2004, 23:05 ஈழம் ஸ
பிந்திக் கிடைத்த செய்திகளின்படி, நீண்டநேர உரையாடல்களின் பின்னர், எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய 58 வயதான, திரு.மஹிந்த ராஐபக்ஷவை, புதிய பிரதம மந்திரியாக ஐனாதிபதி அறிவித்துள்ளார் என்று தெரியவருகிறது.
லக்ஸ்மன் கதிர்காமரையே புதிய பிரதம மந்திரியாக ஐனாதிபதி அறிவிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப் பட்ட போதிலும், மஹிந்த கொடுத்த கடுமையான அழுத்தம் காரணமாகவும், அவர் ஒரு பௌத்த சிங்களவர் என்ற காரணத்தாலும், மஹிந்த ராஐபக்ஷவுக்கே பிரதம மந்திரிப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் மேற்பார்வைப் பொறுப்பு ஐனாதிபதியின் வசமுள்ள நிலையில், ஏப்ரல் 22ல் பாராளுமன்றம் முதன்முறையாக மீண்டும் கூடும்போது, மஹிந்த ராஐபக்ஷ, பாராளுமன்றத்தில் தனது ஆதரவை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். பாராளுமன்றத்தின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், மஹிந்த ராஐபக்ஷ தொடர்ந்து பிரதம மந்திரியாகக் கடமையாற்ற ஐனாதிபதியால் உத்தியோகபூர்வமாக பணிக்கப்படுவார்.
71 வயதான லக்ஷ்மன் கதிர்காமரை, அடுத்த பிரதம மந்திரியாக இன்று சத்தியப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பித்திருந்த நிலையில், மஹிந்த ராஐபக்ஷ அதை எதிர்த்ததாகவும், கடும் பதவிப் போட்டியை முடுக்கி விட்டதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து, சத்தியப் பிரமாண வைபவம் பின்போடப்பட்டதுடன், மஹிந்தவும் ஐனாதிபதி சந்திரிகாவும் பலமணி நேரம் கலந்துரையாடியதாகவும், பின்னர் ஐனாதிபதி, மஹிந்தவை நாட்டின் புதிய பிரதம மந்திரியாக அறிவித்ததாகவும் தெரியவருகிறது. 1970ம் ஆண்டிலிருந்து அரசியலில் தொடர்ந்து செயற்பட்டு வரும் மஹிந்தவுக்கு, சிங்கள மக்களினது செல்வாக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தம்வசம் 40 ஆசனங்களைத் தக்கவைத்துக்கொண்டு, சந்திரிகாவின் கூட்டணி ஆட்சியமைக்க முக்கிய காரணமாக அமைந்துள்ள Nஐ.வி.பி.யினர், மஹிந்த ராஐபக்ஷவை பிரதம மந்திரியாக நியமித்துள்ளமை குறித்து அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. ஏற்கனவே, மஹிந்த ராஐபக்ஷவுக்கும் Nஐ.வி.பி.யினருக்கும் பலத்த கருத்து முரண்பாடு இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>