04-05-2004, 10:44 PM
தாவூத் இப்ராஹீமுக்கு பாகிஸ்தானில் முகமாற்று அறுவை சிகிச்சை
புது தில்லி, ஏப். 5:
இந்தியாவால் தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளில் ஒருவரான, தலைமறைவு சமூகவிரோதக் கும்பல் தலைவர் தாவூத் இப்ராஹீமுக்கு பாகிஸ்தானில் முகமாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.
தனது முகத் தோற்றத்தை மாற்றிக்கொண்டு வளைகுடா நாடுகளில் ஏதாவது ஒன்றுக்குத் தப்பிச் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார் என்று அதிகார வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்காக தாவூத் இப்ராஹீமை இந்தியா தேடிவருகிறது. இந்தியாவில் தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளில் முக்கியமான 20 பேர் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களின் பட்டியலை பாகிஸ்தான் அரசிடம் அளித்து, அவர்களைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா ஏற்கெனவே கோரியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் பணக்காரர்கள் வாழும் கிளிஃப்டன் பகுதியில் ஆடம்பர பங்களாவில், அமீர் சாஹீப் என்னும் இக்பால் சேட் என்ற பெயரில் இதுவரை வசித்துவந்தார் தாவூத். அவரை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்க அரசு அறிவித்தது. ஒசாமா பின் லேடனின் அல்காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதி என்றும் அமெரிக்கா அறிவித்தது.
அதையடுத்து, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் உதவியை நாடினார் தாவூத். அவருக்குப் பாதுகாப்பான தங்குமிடத்தை ஐஎஸ்ஐ. அளித்துள்ளது. ஐஎஸ்ஐ அதிகாரிகளான மேஜர் காலிக், மேஜர் அக்பர் ஆகியோருடன் தாவூதுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்களது ஆதரவுடன்தான் கராச்சியில் ஷேக் தாவூத் ஹஸன் என்ற போலிப் பெயருடைய பாஸ்போர்ட்டில் வசித்துவருகிறார் தாவூத்.
அவரை அல்-காய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்திருப்பதால், அவரால் வெளிநாடுகளுக்கு எளிதாகச் சென்றுவர முடியவில்லை. எனவே பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மூலம் தனது முகத் தோற்றத்தை மாற்றி அமைக்க தாவூத் முடிவு செய்தார். இஸ்லாமாபாதில் அவருக்கு முகமாற்று அறுவைச் சிகிச்சை நடந்துவருகிறது. தனது முகத் தோற்றத்தை மாற்றிக்கொண்டு வளைகுடா நாடுகளில் ஏதாவது ஒன்றுக்குத் தப்பிச் சென்றுவிட அவர் திட்டமிட்டுள்ளார் என்று அதிகார வட்டாரங்கள் கூறின.
தாவூதின் கூட்டாளிகளான சோட்டா ஷக்கீல், டைகர் மேமன் ஆகியோரும் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பயங்கரவாதிகள் ஆவர்.
- Koodal news