04-05-2004, 05:17 PM
அராபத் மீது தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்
- இஸ்ரேல் பிரதமர்
ஜெருசலேம், ஏப். 5: பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத்தை தாக்கமாட்டோம் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதி இப்போது பொருந்தாது என்று இஸ்ரேல் பிரதமர் அரியல் ஷரோன் தெரிவித்தார்.
இஸ்ரேலிய ராணுவ வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் ஷாரோன் கூறியுள்ளதாவது:
பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் முன்பு எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது அராபத் யார் என்பதை அமெரிக்காவும் இதர நாடுகளும் உணர்ந்துகொண்டுள்ளன.
அராபத் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் உறுதியளித்திருந்தேன். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பாலஸ்தீன வன்முறைகளுக்கு அராபத் தான் காரணம்.
இஸ்ரேல் மீது, யூதர்களைக் குறிவைத்து பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்தினால் அராபத் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களா நாங்கள் விட்டுவைக்கமாட்டோம் என்றார் ஷாரோன்.
தினமணி