04-05-2004, 01:36 PM
மற்றைய துறைகளுடன் ஒப்பிடும் பொழுது எழுத்துத் துறையில் இருப்பவர்களிடையேயே அதிகமான பிணக்குகள் எழுகின்றன
விமர்சனம்,இலக்கியத் திருட்டு,உரிமை கோரல் புகழ், புலமைக் காய்ச்சல் போன்ற பல்வேறு பிணக்குகள் எழுத்தாளர்களிடயே ஏற்படுவது வழமை தரமான விமர்சனங்களால் எழுத்தாளன் புடம் போடப்படும் அதேவேளை தரங்கெட்டதனமான விமர்சனங்கள் அவனைப் படுகுழியில் தள்ளும்.வாசகர் மத்தியிலும் ஒரு தப்பபிப்பிராயத்தை உருவாக்கிவிடும்
புகழ் பெற்ற பலர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன சிலர் அவர் மீதான பொறாமையால் அப்படிச் செய்கின்றனர் சிலர் அப்படிச் சொல்லியாவது புகழ் பெற்றுவிட நினைக்கின்றனர் இவற்றை சீர்தூக்கிப் பார்த்து தரங்கெட்டவற்றை விலக்கியும் தரமானவற்றை ஏற்றும் தன்னைச் சீர் செய்து கொள்வது ஒரு எழுத்தாளனின் கடமை.
அதேவேளை எழுதுவதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தவர்கள் இப்படியான குற்றச்சாட்டுகள் எழுத்தாளன் மீது சுமத்தப்படும் போது உண்மை நிலையை அறிவதற்குத் துணை நிற்கவேண்டும்
அந்த வகையில் மோகன் அண்ணா தனது பக்கத்து விளக்கத்தைக் கொடுத்துள்ளார் சோழியன் அண்ணா தனது கதைகளை தளத்திலிருந்து அகற்றியதற்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார் வரவேற்கத்தக்கது ஆயினும் இது பற்றித் தெரிந்தவர்களை விட இப்படியொரு சம்பவம் நடந்ததாக பறைசாற்றி நிற்கும் இந்தத் தலைப்பு களத்தில் இருக்கும் வரைக்கும் வாசகர் பலருக்கும் அக்குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமோ என்ற சலனத்தை உருவாக்கிவிடும்
எனவே இத்தலைப்பை முதலில் களத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
அன்பின் சோழியன் அண்ணாவுக்கு
முதலில் எனது கருத்தை உங்களுக்குத் தனிப்பட அனுப்பலாம் என்றுதான் நினைத்தேன் ஆயினும் புன்பட்ட நெஞ்சுக்கு மருந்தாக இருப்பதைவிட காயம் பெருத்து சீழாகமல் தடுக்கும் என இதனை எழுதுகின்றேன்
தளத்தில் உள்ள கதைகளை அகற்றிவிட்டீர்கள் மனம் ஆறியிருக்கும் ஆனால் குற்றமுள்ள நெஞ்சு குகுறுக்கும் என்ற பேச்சை உங்களால் தடுக்கமுடியுமா?
எனக்குப் புரிகிறது உங்கள் வேதனை ஆயினும் இவ்விடத்தில் நீங்கள் செய்திருக்கவேண்டியது தொடர்ந்தும் நல்ல எழுத்தாளன் என்ற நிலையைப் பேணிக்கொள்வதாகும்
இதனை ஒரு முகஸ்துதிக்காக சொல்லவில்லை உண்மையை மற்றவர்களும் அறியவேண்டும் என்பதற்காக சொல்கின்றேன்
தளத்தில் உங்களின் ஐஸ்கிறீம் சிலையே நீதானோ என்ற கதை வெளிவந்தபோது நான் களத்தில் உறுப்பினன் அல்லன் ஆனாலும் ஒரு வாசகன் அவ்வேளையில் தொடர்ந்து யாழ்தளத்தைப் பார்க்கும் வழக்கம் உள்ளவனாதலால் எனது நண்பர்கள் ஒவ்வொரு முறையும் கதையின் அடுத்த அங்கம் வெளிவந்துவிட்டதா என என்னைக் கேட்பார்கள் படித்துவிட்டு கதையின் போக்கை விமர்சிப்பார்கள்
அதில் பலர் ஒழுங்காகக் கதைகள் வாசிப்பவர்கள் அல்லர் ஆயினும் உங்களின் கதை சொல்லும் பாங்கு அவர்களைக் கவர்ந்திருக்கின்றது
உங்களின் நாரதர் விஜயம் வெளிவர ஆரம்பித்ததிலிருந்து அனைவரும் ஆவலாக அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறோம் அப்பிடியாக பலதரப்பட்ட வாசகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக கதைகளை எழுத சிலரால் தான் முடியும்
வாசிக்கும் வாசகர்கள் எவரும் முட்டாள்கள் இல்லை இது என்ன திரைப்பட வரிசைப்படுத்தலா அதிக எண்ணிக்கையான புள்ளிகள் உள்ள கதையை மட்டும் பார்ப்பதற்கு உண்மையான வாசகன் தேடிப்பார்ப்பான் அவனுக்கு சோடனைகள் தேவையில்லை இதனை புரிந்துகொண்டால் வரிசைப்படுத்தலும் தேவையில்லை அதையிட்டுப் பொருமலும் தேவையில்லை
ஆயிரம் புள்ளிகளாலும் பரிசுகளாலும் வழங்கமுடியாத மனத்திருப்தியை ஒரு உண்மையான வாசகனின் விமர்சனம் வழங்கும் அந்த வாசகனுக்காக உங்கள் எழுத்துப் பணியைத் தொடருங்கள் இது கள உறுப்பினராக அன்றி உங்கள் கதைகளின் வாசகனாக நான் விடுக்கும் வேண்டுகோள்

\" \"