04-05-2004, 09:11 AM
எந்த அணியும் பெரும்பான்மை பெறவில்லை
சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க பலதரப்பினருடனும் பேரம் பேசுகின்றது
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதுவித முயற்சியிலும் இறங்கவில்லை. மக்கள் தீர்ப்புக்கு மதிப்பு அளிப்பதாகக் கூறுகிறார் ஐ.தே.க.செயலாளர்
ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கூட்டமைப்பு தனக்கு அறுதிப் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்காவிட்டாலும் ஆட்சி அமைப்பதற்குப் பெரும் முயற்சி செய்து வருகிறது. ஆட்சி அமைப்பதற்குப் பல தரப்பினருட னும் சுதந்திரக் கூட்டமைப்பு பேரம்பேசி வருகிறது.
அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைப்பதில் ஆர்வம் காட்டாமலும் அதுதொடர்பான எந்த முயற்சியிலும் ஈடுபடாமலும் நிலைமையை அவதானித்து வருகிறார். தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு ஐக்கிய தேசிய முன்னணி தலைவணங்குகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் செனரத் ஹப்புகொட்டுவ தெரிவித்தார். ஆட்சி அமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மை இரண்டில் எந்த ஒரு கட்சிக்கும் கிடைக்கவில்லை. சுதந்திரக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியைவிட மிகக்கூடு தலான ஆசனங்களுடன் முன்னணி யில் நிற்கிறது. ஆக, ஐக்கிய தேசிய முன்னணியை விடச் சுதந்திரக் கூட்ட மைப்புக்கே மக்கள் கூடுதலான ஆத ரவு வழங்கியிருக்கிறார்கள். ஐக்கிய தேசிய முன்னணியை நிராகரித்து விட்டார்கள் என்றே கூறலாம்.
போர்நிறுத்தம், சமாதானம், அமைதி, நாட்டின் அபிவிருத்தி, பொரு ளாதார வளர்ச்சி இவற்றிக்கு இரண்டு கட்சிகளும் மக்களிடம் ஆணை கேட் டுத்தான் தேர்தலில் போட்டியிட்டன. அந்த ஆணையை மக்கள் தனக்கு வழங்காததால் ஐக்கிய தேசிய முன் னணி, ஆட்சி அமைப்பதில் அலட்டிக் கொள்ளவில்லை. எனினும், கட்சியின் இரண்டாவது மட்டத் தலைவர்கள் நேற்று முன்னி ரவு வரை ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக் குறித்து மும்முரமாக ஆராய்ந்து வந்தனர். சுதந்திரக் கூட்டணி தனக்கு மக் களின் ஆணைகிடைக்காவிட்டாலும் கூடுதல் ஆதரவு கிடைத்ததை வைத் துக்கொண்டு ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஜாதிக ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகி யவற்றின் ஆதரவைப்பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட மைப்பு முயற்சித்து வருகின்றது. எவருடனும் கூட்டுச்சேருவதில்லை என்றும் நேற்றுமுற்பகல் வரை சொல் லிக்கொண்டு இருந்த ஹெல உறுமய இப்போது சுதந்திரக் கூட்டமைப்பு தன்னை அணுகியதும் தனது நிலை iமையை மாற்றிக்கொண்டு ஆதரவு அளிப்பதற்குச் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அவற்றுள் மிக முக் கியமாகக் குறிப்பிடத்தக்கவை வரு மாறு:-
<span style='color:#ff002d'>1) பிரச்சனைத் தீர்வுக்கு விடு தலைப் புலிகளுடன் மட்டுமின்றி எல்லா அரசியல் கட்சிகளுடனும் அரசு பேசவேண்டும்.
2) சம~;டி ஆட்சி முறையைக் கொண்டுவரக் கூடாது. ஒற்றையாட் சியே தொடர்ந்து இருக்கவேண்டும்.
3) விடுதலைப் புலிகள் கோரு கின்றபடி அவர்களுக்கு இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை வழங்கக் கூடாது.
இந்தக் கோரிக்கைகள் சுதந் திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக் கும் ஜே.வி.பியினரைத் திருப்திப்படுத் தலாம். ஆனால், ஜனாதிபதியின் சுதந் திரக்கட்சிக்கு இந்தக்கோரிக்கைகள் முற்றுமுழுதாக உடன்பாடானவை அல்ல.
இந்தக் கோரிக்கைகளின் அடிப் படையில் ஹெல உறுமயவையும் இணைத்துக்கொண்டு அரசை அமைத் தால் விடுதலைப் புலிகள் இந்த அர சுடன் பேசச் சம்மதிப்பார்களா? இந் தச் சிக்கலை எப்படித்தீர்ப்பது என்ப தில் சுதந்திரக் கூட்டமைப்பினர் தலையை உடைத்துக்கொண்டு ;இருக் கின்றனர்.
சில விட்டுக்கொடுப்புகளுடன் எப் படியும் ஹெல உறுமயவை இணைத் துக்கொண்டு அரசை அமைப்பதற்குப் பேரம் பேசப்பட்டு வருகிறது.
இ.தொ.காவுடனும் சுதந்திரக் கூட் டமைப்பு பேசி வருகிறது. ஐ.தே. கவின் பட்டியலில் ஐந்து இ.தொ.க வினர் எம்பிக்களாகத் தெரிவு செய் யப்பட்டுள்ளனர். இ.தொ.க - ஐ.தே.க ஒப்பந்தப்படி ஐ.தே.க அரசு அமைக் காவிட்டால் இ.தொ.கவின் எம்பிக்கள் கட்சி மாறி அரசு அமைக்கும் தரப் போடு இணையமுடியும் என்று கூறப் படுகிறது. ஆகவே, ஐ.தே.க. ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபடாவிட்டால் இ.தொ.காவின் எம்.பிகள் ஐவரும் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசில் சேரு வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. இ.தொ.காவின் எதிர்கால நட வடிக்கைகள் குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என் றும், இன்று காலை அது குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் நேற்று இரவு உதயனுக்குத் தெரிவித் தார். இதேபோல, முஸ்லிம் காங்கிரஸை யும் அரவணைக்க சுதந்திரக்கூட்ட மைப்பு தீர்மானித்துள்ளதாகக் கூறப் படுகிறது.
ஐ.தே.க.அரசமைப்பதற்கு போதிய எம்.பிக்களின் ஆதரவைத் திரட்ட முடியாமல் அந்த முயற்சியைக் கைவிட்டால் முஸ்லிம் காங்கிரஸ{ம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பின் அரசுக்கு ஆதரவு வழங்கக்கூடும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், சில கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தினால் மட்டுமே அவ்வாறு ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இணங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது</span>
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>