04-05-2004, 09:08 AM
சுயாட்சி அதிகாரம்: புலிகள் மீண்டும் எச்சரிக்கை
சுய நிர்வாக அதிகாரம் கொண்ட தமிழ் ஈழத்தை அமைப்பதை புதிய அரசு தடுத்தால் மீண்டும் போர் தொடங்குவோம் என விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் சந்திரிகாவின் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் ரணில் துவக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள், சுயாட்சி அதிகாரம் கொண்ட தமிழர் நிர்வாகம் அமைப்பது ஆகியவை குறித்து அவர் அளித்த உறுதிமொழிகளின் நிலை குறித்து பெரும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
இந் நிலையில் தமிழ்நெட் இணையத் தளத்தில் புலிகள் கூறியுள்ளதாவது:
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 22 இடங்களில் தமிழர் தேசியக் கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளதன் மூலம் சுயாட்சி அதிகாரம் கொண்ட தனிப் பகுதி அமைவதைதான் விரும்புகிறோம் என்பதை தமிழர்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
எங்கள் தேசியப் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது. இதன் மூலம் தமிழ் மக்கள் தங்களது உணர்வுகளை வெளியுலகுக்கு எடுத்துக் காட்டிவிட்டார்கள்.
தமிழர்களின் நலனைக் காக்க வடகிழக்கு இலங்கையில் சுயாட்சி அதிகாரம் கொண்ட தமிழ் நிர்வாகத்தை கட்டாயம் அடைந்தே தீருவோம். இதை அரசியல்ரீதியில் பேச்சுவார்த்தைகள் மூலம் அடைய முடியும் என இப்போதும் நம்புகிறோம்.
இந்த முயற்சிகள் தோல்வியடைந்தால், அதை அரசு தடுத்தால் தமிழர் சுயாட்சி நிர்வாகத்தை அமைக்க மீண்டும் ஆயுதம் தூக்குவோம். நிச்சயம் சுயாட்சி நிர்வாகத்தை அமைத்தே தீருவோம்.

இவ்வாறு புலிகள் கூறியுள்ளனர்.
நன்றி - தற்ஸ் தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>