04-05-2004, 09:04 AM
AJeevan Wrote:<b>மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் வேட்பாளர் மறைந்த.ஆர்.சத்தியமூர்த்தியின் புதைக்கப்பட்ட உடலை யாரோ தோண்டியெடுத்து எரித்திருப்தாக சில தகவல்கள் வருகிறது.</b>
இராஐன் சத்தியமூர்த்தியின் சடலம் இனந் தெரியாதோரால் தீயிட்டு எரிப்பு
ஜ கொழும்பிலிருந்து கபிலன் ஸ ஜ திங்கட்கிழமை, 05 ஏப்பிரல் 2004, 11:11 ஈழம் ஸ
அண்மையில் மட்டக்களப்பில் இனந்தெரியாத துப்பாக்கி நபர்களின் சூட்டிற்கு இலக்காகிக் கொல்லப்பட்ட இராஐன் சத்தியமூர்த்தியின் சடலம் அன்னைபூபதியின் நினைவாலயத்திற்கு அருகே புதைக்கப்பட்டதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.
ஒரு வாரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடொன்றில் பலியான மட்டக்களப்புத் தமிழ்த் தேசியக் கூட்டணி வேட்பாளரான இராஐன் சத்தியமூர்த்தி மற்றும் அவரது மைத்துனரின் சடலங்கள் மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவாலயத்தில் புதைக்கப்பட்டன.
இவை அன்னை பூபதிக்கருகே புதைக்கப்படுவது குறித்து அப்போதே அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதும், கருணா குழுவால் பலாத்கார முறையில் அவர்கள் இருவரது சடலங்களும் அன்னை பூபதியின் நினைவாலயத்திற்கு அருகே அடக்கம் செய்யப்பட்டன.
இந்நிலையில் மேற்படி இருவரது சடலங்களும் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோரால் தோண்டியெடுக்கப்பட்டு அருகே உள்ள சவுக்கு மரக் காட்டுப்பகுதியில் தீயிட்டு எரியூட்டப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கருணாவின் நெருங்கிய சகாக்கள் கூட அவரது நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றிருப்பதாகவும் இதனால் கருணா மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கருணாவுடன் இருக்கும் ஒரு சில தளபதிகளும், தங்களை கருணாவிடம் இருந்து விடுவித்து விடுதலைப் புலிகளுடான உறவை மீண்டும் ஏற்படுத்துவதிலேயே முனைப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எந்தவொரு நிலையிலும் இலங்கை அரச படைகளோ அல்லது கூலிக்குழுக்களோ கருணாவை ஒரு சதவீதம் தானும் நம்பத் தயாராக இல்லையென்றும், அதேபோன்று கருணாவும் இவர்களை நம்பி தன்னை பலி கொடுக்கும் திட்டங்களிற்கு அகப்படப் போவதில்லையென்பதுமே தற்போதைய நிலையாகவுள்ளது என மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

