04-05-2004, 07:56 AM
ஆட்சி அமைக்கிறது சந்திரிகாவின் கட்சி: கதிர்காமர் பிரதமராவாரா?
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் ஐக்கி மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு 105 இடங்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 82 இடங்களும் கிடைத்துள்ளன.
225 எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் வேண்டும் என்ற நிலையில் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
புலிகளின் ஆதரவு பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 22 இடங்கள் கிடைத்துள்ளன. இந்தக் கூட்டணி ரணிலை ஆதரிக்கத் தயாராக உள்ளது.
புத்தத் துறவிகளின் கட்சியான ஜாதிக ஹெல உருமய கட்சிக்கு 9 இடங்கள் கிடைத்துள்ளன. இந்தக் கட்சி சந்திரிகாவை ஆதரிக்கும் என்று தெரிகிறது. இதனால் குறைந்தபட்ச (114 இடங்கள்) பெரும்பான்மையுடன் சந்திரிகாவின் கட்சி ஆட்சியை அமைக்கவுள்ளது.
இலங்கை முஸ்லீம் கட்சிக்கு 5 இடங்களும், ஈ.பி.டிபி, யு.சி.பி.எப். ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் கிடைத்துள்ளன. தமிழ் அரசுக் கட்சியோடு, இந்தக் கட்சிகளின் ஆதரவு கிடைத்தாலும் கூட ரணிலால் குறைந்தபட்ச பெரும்பான்மையை எட்ட முடியாது என்பதால் அவர் ஆட்சியமைக்க இயலாத சூழல் உருவாகியுள்ளது.
சந்திரிகாவின் கட்சிக்கு 45.60 சதவீத வாக்குகளும், ரணிலின் கட்சிக்கு 37.83 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதற்கிடையே அடுத்து யார் அமைத்தாலும் விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இந் நிலையில் சந்திரிகாவின் செய்தித் தொடர்பாளர் ஹரிம் பெரிஸ் கூறுகையில், ஆட்சியை அமைத்தவுடன் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவோம் என்றார்.
22 இடங்களில் தமிழ் வேட்பாளர்களுக்கு வெற்றியை உறுதி செய்ததன் மூலம் இலங்கைத் தமிழ் மக்கள் தங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க கடமையை ஆற்றியுள்ளதாக விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது.
பிரதமராக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட தனது கூட்டணிக் கட்சிகளுடனும் பிற கட்சிகளுடனும் அதிபர் சந்திரிகா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
முன்னாள் அமைச்சர் லட்சுமண் கதிர்காமரை பிரதமராக்க வேண்டும் என ஜே.வி.பி. பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.