04-04-2004, 10:48 PM
வோக்கியில் தலைவர் அனுப்பிய உத்தரவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட கருணா
<b>நிதிப் பிரச்சினை தொடர்பாக கருணாவிடம் தலைவர் விளக்கம் கேட்டபோது, 'ஹம்சனை முதலில் திருப்பி அனுப்புங்கள்" என்ற இறுக்கமான பதில்தான் வந்தது!
கருணா விவகாரம் பின்னணித் தகவல்கள்</b>
தேசியத் தலைவரைச் சந்தித்த ஹம்சன் கருணாவுடன் தொடர்புடைய கணக்கு வழக்கு விபரங்களை விலாவாரியாக கூýறுகிறார். குறிப்பாக பல கோடிý ரூýபா பணத்திற்கு கருணா கணக்குக் காட்டத் தவறியிருந்தார்.
விபரங்களை பெற்றுக் கொண்ட தலைவர் அதுபற்றி கவனிப்பதாகக் கூýறி ஹம்சனை மீண்டும் மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால், தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வன்னிக்குச் சென்று கணக்கு வழக்குகள் பற்றி தேசியத் தலைவருக்குத் தகவல்களைக் கூýறியமைக்காக ஹம்சனை கடுமையாக எச்சரித்த கருணா, உள்நோக்கம் ஒன்று கருதி இனிமேல் நிதிப் பொறுப்பாளர் வேலை பார்க்கத் தேவையில்லை என்றும் அதனை வேறொருவர் பார்த்துக் கொள்வார் என்றும் தன்னுடன் இருக்குமாறும் கூýறினார்.
அதனை எதிர்க்காமல் ஏற்றுக் கொண்ட ஹம்சன், அரைகுறையான வேலைகள் சில இருப்பதால் அவற்றை முடிýத்துவிட்டு 3 நாட்களுக்குள் கருணாவின் முகாமுக்கு வருவதாகக் கூýறி, நிதித்துறை அலுவலகத்திற்கு சென்று தேவையான ஆவணங்களை எடுத்துக் கொண்டு மறுநாளே வன்னிக்குச் சென்று விட்டார்.
தேசியத் தலைவரை மீண்டும் ஹம்சன் சந்தித்து விபரங்களைக் கூýறியதும் தலைவர் கருணாவுக்கு வோக்கி மூýலம் செய்தி அனுப்புகிறார்.
'ஹம்சன் என்னிடம் வந்திருக்கிறான். இங்கு வரும்போது அவன் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துவிட்டுப் போ" என்பது தான் அந்தச் செய்தி.
ஆனால், அதற்குப் பதில் செய்தி அனுப்பிய கருணா, 'ஹம்சன் மீது பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவனை என்னிடம் அனுப்பி வையுங்கள். ஹம்சன் இங்கு வரும்வரை நான் அங்கு வரமுடிýயாது" என்று கூýறினார்.
தன்னிடம் வந்து சேர்ந்தவனை அவனது விருப்பத்திற்கு மாறாக அங்கு அனுப்ப முடிýயாது என்றும் ஆதலால் வரும்போது இந்தப் பிரச்சினையைத் தீர்த்து விட்டுப்போ" என்று தலைவர் மீண்டும் செய்தி அனுப்பினார்.
விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களது போராட்ட வெற்றிகளுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று வோக்கி மூýலமான செய்திப் பரிமாற்றம். தலைவரின் வோக்கி மூýலமான கட்டளைகள் அவரது நேரடிýயான கட்டளைகளுக்கு நிகராக போராளிகளால் மதிக்கப்பட்டன.
இதற்கு இந்திய இரானுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு சிறந்த உதாரணம்.
அப்போதெல்லாம் போராளிகள் தாடிý வளர்ப்பதற்கு கட்டுப்பாடு இருந்தது. ஆனால், இந்திய இரானுவத்தினருக்கெதிரான கெரில்லா போராட்ட காலத்தில் போராளிகள் தாடிý வளர்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதையொரு பார்னாக கருதி எல்லாப் போராளிகளும் தாடிý வளர்க்க ஆரம்பித்தனர். இதனால் எவரும் தாடிý வளர்க்கக் கூýடாதென்று தலைவர் வோக்கி மூýலம் செய்தி அனுப்பியதும் உடனடிýயாகவே போராளிகள் அனைவரும் தாடிýயை அகற்றிவிட்டனர்.
கடுமையான கெரில்லா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிýருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் கூýட தலைவரின் வோக்கி மூýலமான உத்தரவுக்குப் போராளிகள் இத்தனை மதிப்புக் கொடுத்தனர்.
ஆனால், ஹம்சன் விவகாரத்தில் தலைவர் கருணாவுக்கு அனுப்பிய செய்தியை கருணா உதாசீனம் செய்த போதே கருணாவின் நடவடிýக்கை எப்படிý அமையப் போகின்றது என்று தெளிவாகப் புரிந்து விட்டது.
மட்டு.அம்பாறை புலனாய்வுத் துறை முக்கியஸ்தரான கீர்த்தியை அழைத்து தலைவர் சந்தித்தார். விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானினால் அவர் நியமிக்கப்பட்டிýருந்தார்.
கருணாவின் நிதி கையாடல்கள், பாலியல் துர்;பிரயோகங்கள், இயக்க விதிமுறைகளை மீறியமை ஆகியவை உட்பட சகல நடவடிýக்கைகளும் ஐயத்திற்கிடமின்றி உறுதி செய்யப்பட்டன. இதனால் தான் பொட்டுஅம்மானின் மீது ஜீரணிக்க முடிýயாத கோபம் கருணாவுக்கு.
ஆரம்பத்தில் ஹம்சனின் முறைப்பாடுகளைப் பரிசீலித்து உரிய நடவடிýக்கைகளை எடுத்திருந்தவர் தமிழீழ நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி. அதனால் தான் தமிழேந்தியையும் கருணா கடுமையாக சாடிýயிருந்தார்.
தன்னுடைய மோசடிý நடவடிýக்கைகள் தெட்டத்தெளிவாக தமிழீழ தலைமையிடம் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால் தண்டனை நிச்சயம் என்பதைப்புரிந்து கொண்டார் கருணா.
இயக்கத்தில் இணையும் ஒவ்வொருவரும் பயிற்சி பெற்ற பின்னர் குறிக்கோளும் செயற்பாட்டுக் கோவையும் என்ற ஆவணத்தை வாசித்து கையொப்பமிட்டுக் கொடுக்கவேண்டும். இதில் நிதிக் கையாடல்கள், பாலியல் பிரச்சினைகள் உட்பட தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் எந்த நடவடிýக்கைகளிலும் ஈடுபடுவதில்லை என்று அவர்கள் பிரதிக்ஞை செய்கின்றனர்.
20 வருட காலமாக போராட்டத்தில் இணைந்திருந்த கருணாவுக்கு இயக்கத்தின் சட்டதிட்டங்கள் நன்கு தெரியும்.
தமிழ்த் தேசிய விடுதலையை வென்றெடுப்பதற்கான இதுவரை கால போராட்டத்தின் அர்ப்பணிப்புக்கள், இனிமேல் தொடரப் போகின்ற அர்ப்பணிப்புகள் எல்லாமே, தான் பெறப்போகின்ற தண்டனையின் முன்பாக கருணாவுக்கு சிறிதாகத் தெரிந்தன.
சமாதானப் பேச்சுவார்த்தையின் ஆரம்ப காலத்திலேயே கருணாவுக்கு சுகபோக ஆசையின் பால் நாட்டம் ஏற்படத் தொடங்கிவிட்டது. வழமைக்கு மாறான அவரது அசாதாரண பழக்கவழக்கங்கள் மூýலம் இதனைத் தெளிவாக புரிந்து கொள்ள முடிýந்ததாக அவருடன் நெருங்கிப் பழகிய சகாக்கள் கூýறுகிறார்கள்.
இயக்கத்தின் சட்ட விதிமுறைகள், மரபுகளுக்கு மாறாக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்த போதே என்றோ ஒரு நாள் தேசியத் தலைமையுடன் முரண்பட வேண்டிýயிருக்கும் என்பதைப் புரிந்து வைத்திருந்த கருணா, இவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சரியான ஆயுதம் பிரதேசவாதம் தான் என்பதையும் தெரிந்து வைத்திருந்தார்.
இதற்கான முன்னேற்பாடாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதேசவாத உணர்வுள்ள சில விரிவுரையாளர்களுடனும், கிழக்கின் முக்கிய வர்த்தகப் பிரமுகர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி என்றோ ஒருநாள் தான் பிரதேசவாதம் பேச வேண்டிýயேற்படும் என்றும், அதற்கு ஆதரவளிக்க வேண்டுமென்றும் கூýறிவைத்திருந்தார்.
இதனால் தான் கருணா பிரதேசவாதம் பேச ஆரம்பித்ததும் அதில் நியாயம் இருக்கிறது என்று கருதி ஆரம்பத்தில் சிலர் ஆதரவளித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுடப்பட்ட ராஜன் சத்தியமூýர்த்தியை ஒரு காலத்தில் துரோகி என்று கூýறி, சுடுவதற்கு முயற்சித்து வந்த கருணா அதே ராஜன் சத்தியமூýர்த்தியுடன் அண்மையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டமையும் காரணத்தோடு தான்.
தமிழ்த் தேசியத்திற்கெதிரான எந்தச் சக்தியுடனும் அது என்ன தரத்தில் இருந்தாலும் சிநேகிதம் வைப்பதற்கு அவர் தயங்கவில்லை.
தனது கையைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் கிழக்கு மாகாணத்தில் தேசியத் தலைமைக்குத் தெரியாமல் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறார்.
குறிப்பாக, முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகளை மேற்கொண்டதுடன் தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இருந்தார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் இடம்பெற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட நிபுணத்துவ ஆய்வுகள், சமாதான முயற்சிக்கெதிராக 3 ஆவது சக்தி ஒன்று செயற்படுவதாகக் கூýறியபோது, அரசாங்கமும் புலிகளும் சமாதான முயற்சியில் பற்றுறுதியுடன் இருக்கும்போது எப்படிý 3 ஆவது சக்தி வெற்றிகரமாகச் செயற்பட முடிýயும் என்று கேள்வி எழுப்பியவர்கள் பலர்.
ஆனால், தேசியத் தலைமைக்குத் தெரியாமல் கருணா மேற்கொண்ட முயற்சிகள் தான் இந்த 3 ஆவது சக்தி என்று இப்போது இனங்காண முடிýகிறது.
இந்த 3 ஆவது சக்தி தமிழ்த் தேசியத்திற்கெதிரான சக்திகளின் ஒரு கூýட்டாக இருக்கக் கூýடும். ஏனென்றால், தமிழ்த் தேசியத்திற்கெதிராக கிழக்கின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சட்ட விரோதமான செயற்பாடுகள் பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டிýருக்கின்றன.
சமாதான பேச்சுக் காலப் பகுதியில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது மனைவி பிள்ளைகளுடன் கருணாவின் மீனக விடுதிக்குச் சென்று உறவாடிý வந்துள்ளமையை பல்வேறு கோணங்களில் தொடர்புபடுத்த முடிýகிறது.
மட்டு.அம்பாறை மாவட்டம் சார்பாக நல்லதொரு தலைமைத்துவம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று தலைவர் பார்த்ததன் விளைவு தான் கருணா என்கிற தளபதி. நல்லதொரு தலைமைத்துவம் கட்டிýயெழுப்பப்பட வேண்டுமென்றால் தொடர்புடைய அதிகாரங்களும் பொறுப்புகளும் முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
இத்தகைய முழுமையான வாய்ப்புகளையும் வளங்களையும் தலைவர் கருணாவுக்கு வழங்கி தனக்கு அடுத்த ஸ்தானத்தை வழங்கினார்.
கருணாவை கேட்காமலும் கருணாவுக்குத் தெரியாமலும் அங்குள்ள போராளிகள் எதையும் செய்ததில்லை. ஒரு போராளி 1000 ரூýபாவுக்கு மேற்பட்ட பொருட்களை வாங்குவது என்றாலும் கருணாவிடம் அனுமதி பெற்றாக வேண்டும். எந்தவொரு தேவைக்கும் என்று 1000 ரூýபா கொடுப்பதானாலும் கருணா அங்கீகரிக்க வேண்டும்.
மட்டு.அம்பாறை தவிர்ந்த தமிழீழத்தின் எல்லா மாவட்டங்களிலுமே நிதி நடவடிýக்கைகள் முழுமையாக நிதித்துறையால் தான் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால், மட்டு.
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை நிதிப் பொறுப்பாளர் என்று ஒருவர் இருந்தாலும் கருணாவே சகல நிதி நடவடிýக்கைகளையும் கையாண்டு வந்திருக்கிறார். அத்தகையதொரு அதிகாரத்தை சில தேவைகளின் நிமித்தமும் நம்பிக்கையின் நிமித்தமும் தலைவர் கருணாவுக்கு வழங்கியிருந்தார்.
ஆனால், சூýரன் எவ்வாறு கடும் தவம் இருந்து கடவுளிடம் வரம் பெற்றுக் கொண்ட பின்னர் நான் என்ற அகங்காரத்துடன் மதியிழந்து செயற்பட்ட நிலைமை கருணாவுக்கு வந்தது.
உண்மையில், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட தேசிய விடுதலைப் போராட்டத்தை நன்கு அறிந்த எவரும், வடக்கு-கிழக்கு என்று பிரதேசவாதம் பேசுவதைப் போன்ற முட்டாள் தனம் வேறு இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வர்.
தேசிய விடுதலைப் போராட்டம் இத்தனை காலம் தொடருவதற்கு காரணமே கிழக்கு மாகாணம் தான். தேசிய விடுதலைப் போராட்டத்தை உக்கிரமாக வளர்த்தெடுக்க வேண்டிýய தேவை தலைவருக்கு ஏற்பட்டதும் கிழக்கு மாகாணத்தினால் தான்.
ஒட்டுமொத்த தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை, தேசிய விடுதலைப் போராட்டத்தின் தோற்றத்திற்கான முக்கிய காரணமாக இருந்தது போல, 1948 இல் சுதந்திரம் பெற்ற காலம் முதல் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்களக் குடிýயேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமையும் முக்கிய காரணம். வடக்கு, கிழக்கின் சகல தமிழர்களையும் ஒரே தலைமை, ஒரே கொள்கையின் கீழ் ஒருங்கிணைத்து தமிழ்த் தேசியத்திற்கான போராட்டத்தை தலைவர் ஆரம்பித்ததும் இன்றுவரை அதனைத் தொடர்வதும் இதற்காகத்தான். இதனைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு ஜனாதிபதி பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் நல்ல உதாரணம்.
பிரேமதாஸவின் பிரதிநிதிகளுக்கும், தேசியத் தலைவரினது பிரதிநிதிகளுக்கும் இடையே கொழும்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிýந்திருந்த போதிலும் எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை.
இறுதியாக பிரேமதாஸவின் செய்தி ஒன்று புலிகளின் பிரதிநிதிகளுக்குக் கூýறப்படுகிறது. 'வடக்கில் ப10ரணமானதொரு சுயநிர்ணய உரிமையை உங்களுக்குத் தருகிறேன். கிழக்கைப் பற்றி பிறகு யோசிக்கலாம" என்பது தான் அந்தச் செய்தி.
செய்தி தேசியத் தலைவருக்கு செல்கிறது. 'இது சரி வராது. இங்கு வருவதற்கு ஆயத்தமாகுங்கள்" என்று செய்தி அனுப்பிய தலைவர் யுத்தத்திற்குத் தயாரானார்.
தலைவரிடம் அன்று பிராந்திய வாதமோ, பிரதேசவாதமோ இருந்திருந்தால் யுத்தத்திற்கு முற்றுப்புள்ளியிட்டு வடக்கிற்கு மட்டும் ஒரு சுய நிர்ணய உரிமையைப் பெற்றுக் கொண்டிýருக்க முடிýயும்.
அப்படிý நடந்திருந்தால் இன்று மட்டக்களப்பும், அம்பாறையும், திருகோணமலையும் முழுமையான சிங்களப் பிரதேசங்களாக மாறிவிட்டிýருக்கும்.
ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கின் விடுதலைக்காகவே இன்றும் இந்த யுத்தம் தொடர்கிறது. இத்தனை அர்ப்பணிப்புகளும், அழிவுகளும், அவலங்களும் கிழக்கின் விடுதலைக்காகத்தான். வடக்கின் விடுதலையை எப்போதோ பெற்றுக் கொண்டிýருக்க முடிýயும். இன்று பிரதேசவாதம் பேசுகின்ற கருணா, ஒன்றைக் கட்டாயம் செய்ய வேண்டும். புலிச் சின்னத்தையும் புலிச் சீருடையையும் அவர் விட்டுவிட வேண்டும்.
ஏனென்றால், புலிச் சின்னமும் புலிச் சீருடையும் தமிழ்த் தேசிய விடுதலையை வென்றெடுப்பதற்காகவென்று தேசியத் தலைவரால் தனித்துவமாக வடிýவமைக்கப்பட்டவை. இத்தகைய புலிச் சின்னத்திற்கும் புலிச் சீருடைக்கும் உரிமை கொண்டாடிýக் கொண்டு பிரதேசவாதம் பேசமுடிýயாது.
இறுதியாக இன்னமும் காலம் தாழ்ந்து விடவில்லை. தமிழ்த் தேசியத்திற்கெதிராக ஒரு தமிழன் துரோகம் செய்வதைப் போன்ற ஒரு ஈனச் செயல் இருக்கமுடிýயாது என்பதைப் புரிந்து கொண்டு தேசியத் தலைவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் கருணா. தலைவர் மன்னிப்பதற்குத் தயார் என்று கூýறியிருக்கிறார்.
எதிர்காலத்தில் சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பமாகின்ற போதும் கிழக்கு மாகாண விவகாரங்களுக்காகவே அரசாங்கத்துடன் புலிகள் கூýடுதலாக முரண்பட வேண்டிýயிருக்கும்.
சில சமயங்களில் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் காணப்பட முடிýயாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிýவடைந்து புலிகள் மீண்டும் யுத்தத்திற்குத் தயாரானால் தனது தேசிய விடுதலைப் போராட்டத்தில் கிழக்கின் சுபீட்சம் தலையாயது என்று தலைவர் கருதி வருவதே காரணமாக இருக்கும்.
'செய்தது மன்னிக்க முடிýயாத தவறு. மன்னிக்கக் கூýடாத தவறு" என்று தெளிவாகவே புரிந்து கொண்டாலும், வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது என்று வரட்டுக் கௌரவத்தைப் பெரிதாகப் பார்க்காமல் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்பதற்கான போராட்டம் உயரியதும் உன்னதமானதும் என்று கருதி கருணா மன்னிப்புக் கேட்க வேண்டும்.
தலைவர் சந்தர்ப்பம் அளித்திருக்கிறார். சண்டைக் களத்தில் முருகன் தனது பலத்தைக் காட்டிý சூýரன் மன்னிப்புக் கேட்பதற்கு வாய்ப்பளித்த போதிலும் வரட்டுக் கௌரவம் அவனுக்கு அழிவையே தேடிýக் கொடுத்தது.
கருணாவும் இந்த வழியைத் தேடிýக் கொள்ளாமலிருந்தால் சரி.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>