04-04-2004, 07:44 PM
மூத்த உறுப்பினர் பாவா வன்னி சென்றார்
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளருமான பாவா அண்ணன் இன்னுமொரு போராளியுடன் கருணாவை விட்டு விலகி வன்னி சென்றுள்ளார் என நம்பகமாகத் தெரியவருகிறது.
மட்டு அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களோடு இணைந்து பணியாற்றிய பாவா அண்ணனின் வெளியேற்றம் அம்பாறை மாவட்டத்தில் கருணா குழுவினரிற்கு மிகப் பெரிய தாக்கமாக அமையும் என நம்பலாம்.
தேர்தலுக்குப் பின்னர் போராளிகளில் பலர் தம்மைவிட்டு விலகிச் செல்லலாம் என்ற எதிர்பார்ப்பு கருணா குழுவினருக்கு இருந்து வந்தது. இதனைத் தடுப்பதற்காக முகாம்களது பாதுகாப்பையும் போராளிகள் மீதான கண்காணிப்பையும் கருணா குழுவினர் மேலும் இறுக்கி வருகின்ற நிலையிலும் போராளிகள் வெளியேறிவருவது கருணா குழுவினருக்கு மிகவும் ஆத்திரத்தை அளித்து வருகிறது.
பாவா அண்ணனின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து தமது முகாமுக்கு வந்த கருணா குழு பொறுப்பாளர் ஒருவர் தம்மை தூசணை வார்த்தைகளால் திட்டியதாக அங்கிருந்து தப்பி வந்து எம்முடன் இணைந்த போராளியொருவர் தெரிவித்தார். கருணாவும் குழுவினர் நிதானத்தை இழந்து வருகிறார்கள் போல தெரிகிறது.
நன்றி - தமிழ் அலை நிழற்பதிப்பு

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>